May 11, 2018

அபாயாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களினதும், அபாயாவை எதிர்ப்பவர்களினதும் கவனத்திற்கு..!!


வறுமையின் காரணமாக ஒருவர் உயிர்நீர்த்தால், அதனை அவரை அன்டிவாழ்ந்த சமூகம் செய்த கொலையாகக் கொள்ளவேண்டும். அவர்கள் அனைவரிடமுமிருந்து கொலைக்கான தண்டப்பணம் அறவிடப்படல்வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம். -- இமாம் இப்னு ஹஸம்.

ஒவ்வொரு மனிதனும் தனது அடிப்படைத் தேவைகளை நிவர்த்திசெய்து கொள்வதனை அவனது உரிமையாக அறிவிக்கின்றது இஸ்லாம்.

இங்கு நோஜிதா விடயத்தில் நடந்தது என்ன? தனது அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற முடியாமல் அவள் திண்டாடியபோது, அவளுடைய இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி அவளிடமிருந்து இன்னும் எதையெதையெல்லாம் உறிஞ்ச முடியுமென சந்தர்ப்பம் தேடியவர்கள் முதலாளித்துவ சக்திகள். அவள்மீது தாங்க முடியாத அழுத்தத்தைப் பிரயோகித்து இறுதில் அவளைக் கொலை செய்தவர்கள் இவர்கள். (இஸ்லாம் இந்த வட்டியை முழுமையாகக் கண்டிக்கின்றது என்பதைக் கவனிக்கவும்.)

பல சந்தர்ப்பங்களில் நுண்கடனை ஏழைகளுக்கு வழங்கி, அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, கடனுக்குப் பதிலாக அவர்களுடைய உடல்களையும் இவர்கள் விலையாகப் பெற்ற / பெற்றுக்கொண்டிருக்கிற செய்திகளை அறியக்கிடைக்கின்றது. மனம் நோகின்றது.

நுண்கடனுக்கும் குடிபோதைக்கும் தொடர்பிருக்கின்றது. இலங்கையில் குடிபோதையில் முதலிடத்தைத் தொட்டிருக்கும் மாவட்டம் மட்டக்களப்பு. குடிபோதையும், நுன்கடனும், (தற்)கொலையும் அதிகளவில் தாண்டவமாடுகின்ற ஒரு சமூகம் இலங்கையின் தமிழ் சமூகம். இந்த மூன்றிற்குமிடையில் மிகநெருங்கிய தொடர்பிருக்கின்றது.

2017 ஆம் ஆண்டிற்கான பொலிசாரின் குற்றச் செயல்கள் அறிக்கையின் படி, அந்த ஆண்டில் மாத்திரம் தற்கொலை செய்துகொண்ட (இந்துத்) தமிழர்களின் எண்ணிக்கை 683. (கிட்டத்தட்ட சம அளவில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தில் இடம்பெற்ற தற்கொலைகள் வெறும் 66 மாத்திரமே.)

இந்தத் தகவலை நான் உங்களுடன் பகிரும் நோக்கம் தமிழர்களை காயப்படுத்தவல்ல. தமிழ் சமூகத்துக்குள் நிறையவே இவ்வாறான உண்மைப்பிரச்சினைகள் இருக்கின்றன. இவைகள்தான் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள். இதை விட்டுவிட்டு, இல்லாத கறுப்புத்துணிக்கெதிராக (அபாயாவுக்கெதிராக) ஆர்ப்பாட்டம் செய்வது முட்டாள்தனம். முதலாளித்துவ சக்திகள் எங்கள் சமூகங்கள் ஒவ்வொன்றின்மீதும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற அநீதிகளிலிருந்து எமது கவனத்தைக் கலைப்பதற்காக கடும் முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

பொதுவாகவே கல்வியில் முன்னிலை வகிப்பதாகக் கருதப்படுகின்ற தமிழ் சமூகம் இந்த விடயத்தில் ஏமாந்துவிடக்கூடாது. எம்மையெல்லாம் சுரண்டி ஏப்பம் விட நினைக்கின்ற முதலாளித்துவத்துவத்தை மிகக்கடுமையாக எதிர்ப்பது இஸ்லாம். அந்த இஸ்லாத்தை எதிர்த்து எந்த ஏழைச் சமூகமும் தன்னைத்தானே பலவீனப்படுத்திக்கொள்ளக்கூடாது.

-mohamed faizal

1 கருத்துரைகள்:

நம் வைத்தியர்களுக்குள் நோயாளிகள் இருக்கலாம்.  ஆனால், நமது வைத்தியம் மரணத்தைத் தவிர, மற்ற எல்லா நோய்களுக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மாமருந்து சகோதரர்களே!

Post a Comment