Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மைத்திரிபால தீர்மானித்துள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, அப்போது எந்த கட்சியையும் சாராதவராக இருந்ததால், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறினார்.

தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருப்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும் விஜயலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருக்கலாம் ஆனால் தற்போது அவர் பிரதான கட்சி ஒன்றின் தலைவர் என்பதால், அவர் கொள்கை ரீதியான முடிவுக்கு வந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ஒருஜினல் கிதுல்கருப்பட்டியை முழுமையாகச் சுவைத்தவருக்குத்தான் அதன் உண்மையான சுவை தெரியும்.நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன அழிவு வந்தாலும் பரவாயில்லை.அதை விட்டுவிட நான் தயாராக இல்லை.அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு ......என்ன எமது மூததயர்கல் சும்மாவா சொன்னார்கள். சுவை கண்டுவிட்டார் விடுவாரா ? நாடாவது மன்னக்கட்டியாவது ......

    ReplyDelete
  3. வெற்றியோடு வீட்டிற்குப் போய் உட்கராமல் தோல்வியோடுதான் போவேன் என அடம் பிடிப்பவர்களை என்ன தான் பண்ண முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.