Header Ads



தில்லு இருந்தால் மோதி பார்க்கட்டும், மூக்கை உடைத்து காட்டுகின்றேன் - ஆறுமுகன்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமானதும், உயர்வுமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 76ஆவது மேதின அனுஷ்டிப்பு நுவரெலியா மாநகரின் மத்தியில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த கூட்டு ஒப்பந்த காலப்பகுதியில் பலர் ஆடிய ஆட்டங்கள் மக்கள் அறிந்தது. இம்முறை அவ்வாறாக இல்லாது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான உயர்வான சம்பளத்தை பெற்று கொடுப்பதில் இ.தொ.கா மும்முரமாக உள்ளது.

11 பேரின் ஆட்டத்தை தகர்த்து காட்டுகின்றேன். கூட்டு ஒப்பந்தத்தை இ.தொ.காவே முன்னெடுக்கும் என்பதையும் மக்களுக்கு வேண்டியவாறு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதிலும் உறுதியாக உள்ளேன்.

மக்களுடைய சக்தியும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காணப்பட்டதனால் நாம் கூறியவாறு நுவரெலியா மாவட்டத்தில் 11 சபைகளை கைப்பற்றி சிலரின் மூக்கை உடைத்தோம்.

அதேபோன்று எதிர்வரும் காலத்திலும் தில்லு இருந்தால் மோதி பார்க்கட்டும். மூக்கை உடைத்து காட்டுகின்றேன் எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.