May 12, 2018

யாழ் முஸ்லிம்களின் காணிகளை, கபளீகரம் செய்வதை முழுமையாக எதிர்ப்போம் - அஸ்மின்

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் ஜின்னா வீதியில் அமைந்துள்ள ஹலீமா ஒழுங்கையில் குளோபள் டிரேடிங் குரூப் என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் ஹோட்டல் மற்றும் விடுதிக்கான கட்டிட நிர்மானத்திற்கு எதிராக குறித்த பிரதேச மக்கள் இன்றைய தினம் (12-05-2018) சனிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தார்கள். அம்மக்களின் அழைப்பின்பேரில் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் குறித்த விடயம் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்தார்.

அத்தோடு குறித்த விடயத்தினை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளிடமும், யாழ் மாநகரசபை அதிகாரிகளிடமும் எடுத்துறைத்ததோடு மேற்படி நிர்மானப்பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி, இதுகுறித்து முழுமையான சட்டரீதியான விடயங்களை மீளாய்வு செய்வதோடு இப்பிரதேச மக்களின் கருத்துக்களையும் அறிந்து குறித்த அனுமதியினை இரத்து செய்தல் தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைவாக உடனடியாக யாழ் மாநகரசபையின் பிரதம பொறியியலாளர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்ததோடு நிலைமைகளை நேரில் கண்டறிதுகொண்டார். சட்டரீதியான ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து துரிதமாக அறிக்கையொன்றினை யாழ் மாநகரசபைக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்படி விடயத்தில் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கையெடுப்பதாகவும், அதனடிப்படையில் இவ்வனுமதியினை இரத்து செய்தல் தொடர்பில் ஆராய்வதாகவும் உறுதியளித்தனர்.

இதன்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள்; யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இப்பிரதேசத்தில் வேறு எங்கும் காணிகள் கிடையாது, எமது மக்களின் வறுமை நிலைமையினையும், மீள்குடியேறுவதற்கான சாத்தியப்பாடுகளற்ற நிமையினையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஒரு சிலர் முஸ்லிம் மக்களின் காணிகளை அற்ப விலைக்கு வாங்குகின்றார்கள், யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசம் யாழ் நகருக்கு அன்மித்திருக்கின்ற காரணத்தினால் இக்காணிகள் யாவும் மிகவும் பெறுமதிவாய்ந்தவையாகும், அதை எமது அறிந்துகொள்ளவில்லை, தமது காணிகளை அற்பவிலைக்கு விற்று வருகின்றார்கள், அதன் விளைவுதான் இப்போது இவ்வாறு எமக்கு முன்னால் எழுந்து தாண்டவமாடுகின்றது. முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது, அதற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.

குறித்த பகுதிக்கு 13ம் வட்டாரத்தின் யாழ் மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கௌரவ கே.எம்.நிலாம், மற்றும் 10ம் வட்டார யாழ் மாநகரசபையின்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கௌரவ எம்.எம்.எம்.நிபாஹிர் ஆகியோரும், பெருந்திரளான யாழ் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

6 கருத்துரைகள்:

காணிகளை மக்கள் விற்கும்வரைக்கும் வாணத்தில் வெள்ளியே பார்த்துக்கொண்டு இருந்தீர்களாக்கும்.


அஸ்மின் உங்களுக்கென்ன முஸ்லிம்ள் மீதூ அவ்வளவு அக்கரை

அஐன் அந்தோனிராஜ் கானிகலை விக்கும்போது வெள்ளிபார்க்கவில்லை தமிழ் மக்கள் வெள்ளாளர்கள் என்று பார்த்தார்கள் இப்பதான் தெரியுது வெள்ளையா, கருப்பா என்று
ஐயா நல்லுர் கோயிலுக்கு பக்கத்தில் காணியை வாங்கி விபச்சார விடுதியை கட்டுங்கள் பார்ப்போம் ? அதை எப்படி நீங்கள் தடுப்பிர்களோ அதைத்தான் இங்குள்ள மக்களும் தடுக்கின்றார்கள் அதை ஏன் உங்களால் ஜீரனிக்க முடியவில்லை உங்களுக்கு தெரியாத ஒன்றையும் இங்கு சுற்றிகாட்டுகின்றோம் 90 ம்ஆண்டு பிரபாகரனால் யாழ் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்து வேளியேற்றப்பட்டதன் பிரகு முஸ்லிம்களின் வீடு காணிகலை
பிரபாகரன் மாவீரர்களுக்கு தானமாக கொடுத்தார். ஒரு பழமொழி ஞாபகம் வருது( ஊர்ரார் வீட்டு கோழியை அரூத்து யாருக்கோ தானம் செய்த கதையாம்)

@Meera, உங்கள் அரசியல்வாதிகள் சொல்லும் பொய்யை நீங்களும் சொல்லுகிறீர்கள். நம்ப முடியாத பொய்கள்.

1990 யில் முஸ்லிம்கள் விரட்டபட்டார்கள். 1993 லிருந்து முழு யாழ்பாணமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுபாட்டில் உள்ளது. அரசாங்கத்தில் எப்போதும் முஸ்லிம் கட்சிகள் பங்காளிகள். நீங்கள் சொல்வது போல் புலிகள் வீடுகளை எடுத்திருந்தாலும், ராணுவத்தினை விட்டு இலகுவாக விரட்டி விட்டு வீடுகளை மீழ பெற்றிருக்க முடியும்.

2009 க்கு பின்னராவது, காணி உறுதிகளை வைத்து பொலிஸ்/நீதிமன்றத்தில் ஊடாக மீழ பெறலாம். காணி உறுதிகள் துளைந்திருதால் சட்டத்தரணியூடாக கச்சேரியில் பெறலாம்.

எனவே நீங்கள் சொல்லி திரிவது பொய் என்பது நிதர்சனம்.

@Ajan
நான் எந்த அரசியல்வாதிகலையும் நம்பமாட்டேன் முதலில் அதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள் என்னுடைய பதிவுகலை பார்த்திர்களானால் புரியும்.
1990-10-30 முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் பின்பு வவுனியாவிற்கு அப்பால் யாரும் போகமுடியாமால் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் இது உங்களுக்குத் தெரியாதா? 90ம. ஆண்டு உங்களின் வயதென்ன? அல்லது நீங்கள்
கோமாவில் இருந்திர்களா? அப்படி எதுவும் இல்லையேன்றால் ஒரு பொய்யை மரைக்க அடுத்தவர்கலை பொய்யர்கள் என்று கூற வருகின்றிர்களா? நான் ஏன் இதை இவ்வளவு தைரியத்துடன் உங்களுக்கு எழுதுகின்றேன் என்றால் எனது உரவினர் ஒருவரின் வீட்டில் இன்று வரை குச்சவெளியை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகின்றனர் அவர்கள் மாவீரர் குடும்பத்தினர் அவர்கள் மூலைச்சலவை செய்யப்பட்டு புலிகள் இயக்கத்தில் இனைக்கப்பட்டவர்கள் பாவம் என்ற படியால் இன்னும் அங்குதான் இருக்கின்றனர் அவர்கள்
அனுமதித்தால் அவ்ர்களின் விபரத்தை பதிவிடுவேன்.

@meera, அப்போது நான் பாடசாலை சிறுவன் தான் ஆனால் அறியும் வயது.

உங்கள் உறவினர் தனது வீட்டில் இருப்பவர்கள் பாவம் என விட்டுவிட்டு இருக்கிறாரா?, பெரிய மனது தான் அவருக்கு. ஆனால், உறவினரிடம் அந்த வீட்டு உறுதி இருக்கிறதா?

Post a Comment