May 02, 2018

சண்முகா கல்லூரியில், முஸ்லிம் மாணவிகளுக்குரிய சீருடை அணியவும் தடை - ஆடை சுதந்திரத்தை வழங்க மஜ்லிஸ் அஷ்ஷூஷுரா கோரிக்கை


(திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கலலூரி முஸ்லீம் பெண் ஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் கிண்ணியா  ஜம்இய்யதுல் உலமா மற்றும்  பிரதேச சிவில் அமைப்புக்களின் ஒன்றியமான மஜ்லிஸ் அஷ்ஷூஷுரா இணைந்து வெளியிடும் ஊடக  அறிக்கை)

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் மூவினத்தையும் சேர்ந்த ஆண் பெண் ஊழியர்கள் தங்களது கலாச்சார, பண்பாட்டு உரிமைகளைப் பேணிச் செல்லும் வகையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளது. 

குறித்த கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு உரித்தான பாடசாலைச் சீருடை அணியூம் உரிமை பல வருட காலமாக மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்பொழுது முஸ்லிம் ஆசிரியைகளின் ஹபாயா ஆடை அணியும் உரிமையும் மறுக்கப்பட்டிருக்கின்றது. இம் மறுப்புக்குக் காரணமானவர்கள் வீதிக்கிறங்கி போராடியிருப்பது இதுவே வரலாற்றில் முதல் தடவையாக இருக்கும். பாடசாலை நிர்வாகமும் கல்வி நிருவாக அதிகாரிகளும் இணைந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை பூதாகரமாக்கி,முஸ்லீம்களின் மொழிநடை, பண்பாடு, முஸ்லீம் பாடசாலைகள் என்பவற்றைக் கொச்சைப்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்திப் போராடி இருப்பது முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது. 

இந் நிகழ்வூகள் இன நல்லுறவைப் பேணுவதற்கு குந்தகமாகவும்,, மாணவப் பிஞ்சு உள்ளங்களில் இன ரீதியான கசப்பு உணர்வுகளை, நச்சு விதைகளை விதைப்பதற்குக் காரணமாகவும் அமையும் என்பதால் இதற்குப் பிண்ணனியான இருந்தவர்களையும் இவ் விடயத்தைத் தெருவிற்கு விட்ட பாடசாலை நிர்வாகத்தையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

முஸ்லீம் பெண் ஆசிரியைகள், முஸ்லீம் மாணவிகளது ஆடை தொடர்பாக கல்வி அமைச்சின் தெளிவான சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டும் இதற்கு மேலதிகமாக நீதிமண்றத் தீர்ப்புக்களும் உள்ள நிலையில் இவற்றையெல்லாம் கவனத்திற் கொள்ளாது இப் பிரச்சினையை வெளிச் சமூகத்திற்குக் கொடுத்து, வீதியில் இறக்கி வைத்தமைக்கு ஏதோ ஒரு உள் நோக்கம் இருப்பதாக சந்தேகிக்க இடமுண்டு. 

இப் பிரச்சினையை நீதிமண்றத்திற்குக் கொண்டு சென்று, விரைந்து தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றிருந்தும் சம்மந்நப்பட்ட தரப்பினருடன் பேசி, சுமூகமாகத் தீர்க்க முயல்வதே இன நல்லினக்கத்திற்கு சினந்ததென்ற வகையில் இவ்விடயம் தொடர்பில்   நடைபெற்றுவரும் கலந்துரையாடல்கள் முன்னெடுப்புக்களில் எமது பிரதிநிதிகளும் பங்கு கொண்டு வருகின்றனர்,இவ்விடயத்தில் தூர நோக்குடன் சகல சமூகங்களினதும் பல்கலாசாரங்கள் மதிக்கப்படுகின்ற தீர்வொன்றை நோக்கி நகர்வதே சகல தரப்பினருக்கும் சிறந்ததாக இருக்கும்.

உண்மையில் இவ்விடயம்  தற்போது குறித்த பாடசாலைக்கும் ஐந்து முஸ்லீம் ஆசிரியைகளுக்குமுரிய பிரச்சினை ஒன்றல்ல, மாறாக இது ஒரு தேசியப் பிரச்சினையாக  உருவெடுத்துள்ளது.இக்குறித்த ஆசிரியர்களை இடமாற்றம் செயௌவதோ,தற்காலிக இணைப்புசெய்வதோ தீர்வாகமாட்டாது அவ்வாறாயின் கல்வியமைச்சு ஆசிரியர் நியமனங்களையும், இடமாற்றங்களையும் தேசிய அளவில் மீள் ஒழுங்கு செய்ய வேண்டி ஏற்படும். 

எனவே இவ் விடயம் தொடர்பாக கீழ்வரும் பரிந்துரைககளையும் ஆலோசனைகளையும் முன்வைக்கின்றாம்.

1. தற்காலிக இணைப்பைப் பெற்றுக்கொள்ள நிர்க்கந்திக்கப்பட்ட ஆசிரியைகளின்  இணைப்பு இரத்துச் செய்யப்பட்டு அவர்களின் கலாச்சார ஆடை அணிந்து பணி புரிய அணுமதிக்கப்படல் வேண்டும்.

2. குறித்த பாடசாலையில் சுமார் 120 இற்கும் மேற்பட்டமுஸ்லிம் மாணவிகள் கல்வி கற்பதனால் முஸ்லீம் ஆசிரியைகள் இல்லாத நிலையில் அவர்களின் கலாச்சாரம் சார்ந்த நலன்களைப் பேணுவதில் சிரமங்களை எதிர் நோக்க நேரிடும் என்ற வகையிலும் அங்கு முஸ்லிம் ஆசிரியைகள் தொடர்ந்தும் காணப்படல் வேண்டும்.

3. குறித்த கல்லூரி தேசிய பாடசாலை ஆகையால் மத்திய கல்லி அமைச்சின் நிரந்நரத் தீர்வினை  அவசரமாக பெற்றுக்கொள்தல்.

4. மாவட்டத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் அவர்களுக்கென இருதேசிய பாடசாலைகளே உள்ளன. எனவே இவ் எண்ணிக்கை அதிகரிக்கப்படுதல் வேண்டும். குறிப்பாக கிண்ணியா, திருமலை நகரத்திலும் குறைந்நது இரு முஸ்லீம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படல் வேண்டும். 

5. பாடசாலைக் கலைத்திட்டத்திலும் பாடத்திட்டத்திலும் பிற மதத்தினரின் கலாசாரஇ பண்பாடுகள் தொடர்பில் பரஸ்பர புரிந்துணர்வூ மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்கான கற்றல் தேர்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூழலில், மும் மொழிகளில் கல்வி கற்கக்கூடிய தனிப் பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டுமென வலியூறுத்தப்படுகின்ற சூழலில் இவ்வாறான இனக் கலாச்சார எதிர்ப்புணர்வூகளை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவது பாடசாலை நிர்வாகங்களால் முற்றாகத் தவிர்க்கப்படுவதோடு நாட்டிலுள்ள சகல பாடசாலைகள் பயிற்சிக்கல்லூரிகளிளுமுள்ள மாணவர்களுக்கும் அந்தந்தசமூக ஆடைக்கலாசார சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும். 

6-இலங்கை அரசியல் அமைப்புச்சட்டத்திலும் கல்வி அமைச்சின் சுற்று நிருபங்களிலும் குறித்துரைக்கப்பட்ட ஆடை சுதந்திரத்திற்கு மாற்றமாக எந்தவொரு உத்தியோகத்தர்,ஆசிரியர், மாணவ மாணவிகள் எவரையும் யாரும்  நிர்ப்பந்திக்கக்கூடாது,அவ்வாறு செய்வோருக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை மீள உறுதிப்படுத்ப்பல் வேண்டும்.

7-பாடநூல்களிலுள்ள பல்லினக்கலாசாரம் தொடர்பான புரிந்துணர்வு அதனைக்கற்கும் மாணவர்களுக்கு மாத்திரமல்ல கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும்,கல்வி அதிகாரிகளுக்கும் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுக்கும் ஏற்படுத்தப்பவேண்டிய அவசியத்தேவை எழுந்துள்ளது,இதுவே நிரந்தர நல்லினக்கத்தை,நீடித்த சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வழியுமாகும்.

மேலும் குறிப்பாக இச் சர்ச்சை தொடர்பாக தமிழ், முஸ்லீம் தரப்புக்களில் நடு நிலையாகச் சிந்திக்கின்ற செயற்படுகின்றவர்களின் உள்ளங்கள் புண்படும் வகையில் விமர்சனங்களையூம் வெறுப்புப் பேச்சுக்களையூம் சமூக வலைத்தளங்களிலோ, ஊடகங்களிலோ பதிவூ செய்வது, பகிர்வது, எழுதுவது முற்றாகத் தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் தமிழ் முஸ்லீம் நல்லுறவூக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய திருகோணமலை மாவட்டம், தொடர்ந்தும் அந் நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அனைத்துத் தரப்பினரும் சிந்தித்துச் செயற்படுவோமாக.என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

8 கருத்துரைகள்:

ஏன் இந்த முஸ்லிம்சமூகம் இன்னும் விழிக்கவில்லை ? நீங்கள் ஏன் இந்து restaurant க்குச்சென்று ஹலால் உணவு தரவில்லையென்று சண்டைபோடவேண்டும் ? உங்களுக்கென தனியான எத்தனையோ பாடசாலைகள் இருக்கும்போது அல்லது புதிய முஸ்லீம் பாடசாலையை உருவாக்குங்கள். எமது வங்குரோத்து அரசியல்வாதிகளால் உருவாக்கமுடியாதென்றால் மக்களால் முடியும், வீதிக்குச்செல்லுங்கள்
முதலில் ஜனநாயகமுறையில் போராடுங்கள், மாறாக ஹிந்துப்பாடசாலைக்குப்போய் முஸ்லீம் ஹபாயாவை அனுமதியென்று கெஞ்சவேண்டாம். இப்பிரச்சினை மிகத்தெளிவாக வடக்கு கிழக்கு இணையவேண்டுமா என்ற கேள்விக்கும் பதில் தருகின்றது. நாங்கள் இன்னும் மடையர்களாக இருக்கக்கூடாது.

This comment has been removed by the author.

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
(அல்குர்ஆன் : 5:55)
www.tamililquran.com

Hindu terrorism will be eradicated by Muslims freedom fighter soon

Hindu fundamentalist wants a another war in Sri Lanka so that they would go more backwards in life apart from recent war with Sinhala terrorist.

If you want a peaceful life just shut your mouth and back.

Your not Sri Lankan your LTTE terrorist.

Rana Flip you are a lowlife. Terrorists are Muslims and Muslims are terrorists.

Post a Comment