May 28, 2018

இலங்கை சிவசேனாக்கு, பகிரங்க விவாத அழைப்பு


பெருமதிப்புக்குரிய மறவன்புலவு சச்சிதானந்தம்,
தலைவர், சிவசேனா அமைப்பு,
யாழ்ப்பாணம் ஃ கொழும்பு.
28.05.2018

பெருமதிப்புக்குரிய இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களே!

அண்மையில் மாடு அறுத்தல் சம்பந்தமாக ஒரு இனத்துவேசக் கருத்தினை நீங்கள் வெளியிட்டு இருந்தமை தாங்களுக்கு நினைவிருக்கும். இது விடயமாகவும், அத்துடன் சேர்த்து இலங்கை முஸ்விம்களின் பூர்வீகம் சம்பந்தமாகவும் தாங்களுக்கு போதிய வரலாற்றறிவு இல்லை என்று நான் உறுதியாக நம்புவதால் தாங்கள் விரும்பினால் அது பற்றியும் பகிரங்கமாக விவாதிக்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றேன் என்பதை இத்தால் அழைப்பு விடுக்கின்றேன்.

எங்களது நோன்புப் பெருநாள் முடிந்ததன் பின்னர், கட்டணம் செலுத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்சியொன்னினூடாக மேற்படி விவாதத்தினை நடாத்துவதன் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் எமது விவாதத்தினை நேரடியாகவும் இலகுவாகவும் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும் என்று கருதுகின்றேன்.

தற்போது வெளிநாடு ஒன்றில் தொழில் புரிவதாலும் ஒரு மாதகாலமே எனக்கு விடுமுறை இருப்பதாலும் எதிர் வரும் 10.07.2018 ஆந் தேதிக்கு முன்னர் தாங்களுக்கு சாத்தியமான ஒரு தினத்தை எனக்கு அறியத் தருமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பு : இவ்விவாதம் நம்மிருவருக்கும் இடையில் அல்லது நம்மிருவருடனும் கலந்து கொள்ளும் குழுக்களுக்கிடையில் நடைபெறும் விவாதமே அன்றி, ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடைபெறும் விவாதமன்று என்பதையும் நினைவில் கொள்ளவும்.

'இந்து சமயம் ஆகம  விதிப்படி உருவாகியதன் பின்னரும் கூட, அறுபத்து நான்கு நாயன்மாரில் ஒருவராக கன்னப்ப நாயனார் கருதப்படுகிறார். பதப்படுத்திய பன்றி இறைச்சியை இறைவனுக்குப் படைத்ததாக இந்து சமயப் புராணங்கள் தெரிவிக்கின்றன'. ஆகவே, இந்து சமயத்தின் ஒரு வகையான பிரிவில் கூட மிருகங்களை பலியிடுதல் என்பது காணப்பட்டே வந்திருக்கின்றது என்ற அடிப்படையில், மிருகப்பலியிடல் (உயிர் கொல்லல்) என்பது பற்றியும் எமது விவாதத்தின் போது கவகணத்தில்  கொள்ளப்படும் என்பதையும் நினைவுட்டிக் கொள்கின்றேன்.

எனது முகவரி : lareef111@gmail.com

இப்படிக்கு, அன்புடன்

மௌலவி நாகூர் ழரீஃப்

6 கருத்துரைகள்:

Don't debate with foolish

முஸ்லிம்களுடன் விவாதம் எண்டவுடன் ஓட்டம் பிடிப்பவர்கள் தான் அதிகம். பார்க்கலாம் கிழட்டு சச்சிக்கு விவாதம் செய்யுமளவிற்கு மண்டையில் களிமண்ணாவது இருக்கின்றதா என்று

இவனைப்போய் பெருமதிப்பிற்குரிய என்று குறிப்பிடுவது மனதிற்கு வேதனையாகவுள்ளது.

முதலில் மாட்டிறச்சி தடை கோரிக்கையை இலங்கையில் கொண்டுவந்த BBS சிங்கள அமைப்பை தான் விவாதத்திற்கு முதலில் அழைக்க்வேண்டும்.

BBS யுடன் விவாதம் நடாத்த பயம். இப்படியான “உலக மகா கோழைகளுடன்” விவதம் நடத்துவது தமிழர்களுக்கு கேவலம்.

அருமையான முடிவு மானமுள்ள மனிதனாக இருந்தால் விவாதத்திற்கு வாருங்கள் இவர் போன்ற பணத்துக்கு வாலாட்டும் கபோதிகளுக்கு விவாதம் என்றால் என்னவென்று புரியுமா?

Post a Comment