Header Ads



ஹக்கீம், றிசாத், மனோ ஆகியோருடன் செய்த உடன்படிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்

அமைச்சரவை மறுசீரமைப்புக்கு முன்னர் அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் இரண்டும் சிறுபான்மைக் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய இணக்கப்பாட்டு உடன்படிக்கை குறித்து உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் கூட்டு எதிர்க் கட்சி என்பவற்றின் தலைவர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் புதிய பங்காளிக் கட்சிகளுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை எதுவென்பதை, இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முற்போக்கு கூட்டணி உட்பட சிறுபான்மைக் கட்சிகள் பலவற்றுடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்துக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்க்கமாட்டாது என்றும், பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அமைச்சர்களின் தலைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றதே அன்றி, நாட்டின் அபிவிருத்திக்கு உரிய வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லையெனவும் கூறப்படுகின்றது. 

1 comment:

  1. First you disclose the agrrement you had with Rishad Badiudeen for resettlement process after 2009 in Musali DS and Mannar Pradeshya DS. He has misused around 15 000 house units given by Indian govt by encouraged and settled 70 000 of illegal muslim entries. Please can you have open talk on this matter.
    We have to praise Mahinda for this. Getting finance from India and settled anti Indians in pro indian areas. Rishad was master mind for that illegal process happened in your regime.

    ReplyDelete

Powered by Blogger.