Header Ads



அனுரகுமார திசாநாயக்கவும், நானும் மட்டுமே இலஞ்சம் வாங்கவில்லை

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் தனக்கும் லஞ்சம் வழங்க முயற்சித்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த 2015ம் ஆண்டு தேர்தல் செலவுகளுக்காக அர்ஜுன் அலோசியஸ் எனக்கும் ஒரு தொகைப் பணம் வழங்க முன்வந்தார் எனினும் நான் அதனை மறுத்துவிட்டேன்.

வாங்கிக் கொள்ளவில்லை. தற்போதைய நிலையில் அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்க முன்வந்தும் அதனை வாங்கிக் கொள்ளாதவர்கள் என்று பார்த்தால் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும், நானும் மட்டுமே அவ்வாறு வாங்கிக் கொள்ளவில்லை.

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி பிரதேச அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் என்று பலதரப்பையும் சேர்ந்த 118 பேர் அர்ஜுன் அலோசியஸ் இடமிருந்து பண அன்பளிப்புகளைப் பெற்றுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அதனால்தான் சொல்கிறோம்
    அனுரகுமார திஸாநாயக்க நம்
    அடுத்த தலைவராகட்டும் என்று

    ReplyDelete
  2. உன்மையான முஸ்லிமுக் குரிய பண்பு
    முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் இல்லாதது வெட்கம்.

    ReplyDelete

Powered by Blogger.