Header Ads



நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல, அரசாங்கத்தையும் மீண்டும் நிமிர்த்த முடியாது - டி.எம். ஜயரத்ன

எந்த வழிமுறைகளை கையாண்டாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல் தற்போதைய அரசாங்கம் எப்படியான மறுசீரமைப்புகளை மேற்கொண்டாலும் அதனை நிமிர்த்த முடியாது என முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பிரதமரை கம்பளை, தொழுவ பகுதியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதமர்,நாடு தற்போது மிகவும் அதளபாதளத்திற்கு சென்றுள்ளது.

இந்த அரசாங்கம் இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற போதிலும் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியாது.

நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல் அரசாங்கத்தை மீண்டும் நிமிர்த்த முடியாது. கடந்த காலத்தில் 7 சதவீதமாக இருந்த நாட்டின் வருமானம் தற்போது 3.5 வீதமாக குறைந்துள்ளது. டொலரின் விலை தாங்கிக் கொள்ள முடியாதளவில் அதிகரித்துள்ளது.

பண்டாரநாயக்க நடுநிலையான கொள்கைகளின் அடிப்படையில் ஆரம்பித்த கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. இதன் மூலம் நாட்டின் வறிய மக்களுக்கு மிகப் பெரிய நிவாரணங்கள் கிடைத்தன.

அத்துடன் சகல இன, மதங்களையும் சமமாக மதித்தமை, நாட்டின் சகல இனங்களின் ஐக்கியத்திற்கு காரணமாக அமைந்தது.

அப்படியான கட்சியின் பழைய உறுப்பினர் என்ற வகையில், கட்சி வீழ்ச்சியடைவதை நான் விரும்ப மாட்டேன். நாடு நெருக்கடியை சந்தித்த சகல சந்தர்ப்பங்களின் கட்சி குரல் கொடுத்தது. இன்றும் அது நடந்துள்ளது.

உலகமும், நாடும் மாறுபடும் போது அதனை நாம் ஏற்றுக்கொண்டாலும் கட்சியின் கொள்கைகளை காட்டிக் கொடுப்பது பொருத்தமற்றது எனவும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. அடுத்த கன்டெய்னர் எப்போது வருகிறது? அதில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால் இப்போது நல்ல கூட்டாளிமார்கள் இருப்பார்களே.எந்த பிரச்னையும் இன்றி வௌியே எடுக்க.

    ReplyDelete
  2. Paksa paksa.No one thinking ABOUT COUNTRY.

    ReplyDelete
  3. NAADE ILLATI UNAKKU EDHU PAKSADA???

    ReplyDelete

Powered by Blogger.