Header Ads



"புத்தளத்தின் அபிவிருத்திக்கு கைத்துப்பாக்கியைக் காட்டியே நிதி பெற்றுக்கொண்டேன்"

புத்தளம் மாவட்டத்துக்கான அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு கைத்துப்பாக்கியைக் காட்டியே நிதியைப் பெற்றுக் கொள்ள நேர்ந்ததாக அமைச்சர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தின் பள்ளம கிராமத்தில் நேற்று தெதுருஓய-செங்கல்ஓயா அபிவிருத்தி செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆனமடுவ தொழில்நுட்பக் கல்லூரிக்கு அரசாங்கம் 380 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அதற்கான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காக இடையில் இருந்த கைத்துப்பாக்கியை வெளியில் எடுக்க நேர்ந்தது.

அக்காலப் பகுதியில் நான் கடமையாற்றிய அமைச்சின் அமைச்சர் எந்தவொரு செயற்திட்டத்தை மேற்கொள்ளவும் எனக்கு இடமளிக்கவில்லை. தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்க முனையும் போது அதற்கான ஆவணங்களை ஒழிக்கத் தலைப்பட்டார்.

அந்த நேரத்தில் நான் என் இடையில் இருந்த கைத்துப்பாக்கியை வெளியில் எடுக்க நேர்ந்தது. அவ்வாறில்லாவிட்டால் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாது.

தற்போதைக்கு தொழில்நுட்பக் கல்லூரி நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த வைபவத்தில் உரையாற்றிய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டம் குறித்தும் போதுமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை.

அந்தளவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கனவான் அரசியல் செய்கின்றனர். நமது நாட்டுக்கு கைத்துப்பாக்கியைக் கொண்டேனும் காரியங்களை சாதித்துக் கொள்ளக் கூடிய அரசியல்வாதிகளே தேவையாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.