Header Ads



இலங்கை - இங்கிலாந்திடையே நடக்கவிருந்த சூதாட்டம் - அல் ஜசீரா

பணத்திற்காக ஆடுகளத்தை மாற்றிய சம்பவம் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சியின் விவரண செய்தி தொடர்பாக, உறுப்பினர்களுடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 

அப்போது டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. 

காலையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் இதேபோல் இதே மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அவுஸ்திரேலியா இடையேயான போட்டி இரண்டிலும் சூதாட்டம் நடைபெற்றதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டு உள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது நடைபெற்ற சூதாட்டம் ரகசிய கேமராவில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதில் அதே வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து போட்டியிலும் சூதாட்டம் நடைபெற திட்டமிட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) விசாரணை செய்துள்ளது. கிரிக்கெட் சூதாட்டகாரர்கள் என்ற விவரண செய்தி ஞாயிறு அல் ஜசீரா ஆன் லைனில் ஒளிபரப்பாகியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.