Header Ads



பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளால், ஜனாதிபதி அதிருப்தி

அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொது வெளியில் தம் மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தச் செய்தியில்,

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரத் பொன்சேகா சட்டம், ஒழுங்கு அமைச்சர் பொறுப்பு தனக்கு வழங்கப்படாமைக்கு சர்வதேச அழுத்தமே காரணம் எனவும், கொழும்பு அரசியலில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் அரசியல் ஸ்தம்பித நிலைமைக்கு ஜனாதிபதி மைத்திரியே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அமைச்சரவை கூட்டுப் பொறுப்புக் கட்டுப்பாட்டை மீறி அரசின் தலைவரான ஜனாதிபதி மீது அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகப் பொது வெளியில் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளனர் எனவும், இதன் அடிப்படையில் இந்தச் குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் பதிலளிக்க ஜனாதிபதி மைத்திரி தயாராகி வருகின்றார் எனவும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக எதிர்ப்பை வெளியிட ஜனாதிபதி தயாராகியுள்ளதால் இந்தச் சூழ்நிலை கொழும்பு அரசியலில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.

கடந்த கால ஊழல், மோசடியில் இருந்து ராஜபக்ஷக்களை ஜனாதிபதி மைத்திரியே காப்பாற்றி வருகின்றார் எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றுள்ளது.

3 comments:

  1. Every body has rights to stand with their opinions. So Sarath fonseka is right and I'd president also a right person, he should be answered for fonseka's statements.

    ReplyDelete
  2. Every body has rights to stand with their opinions. So Sarath fonseka is right and if president also a right person, he should be answered for fonseka's statements.

    ReplyDelete
  3. எல்லோரும் மாறி மாறி குற்றம் சாடிக்கொண்டே இன்னும் உள்ள 18 மாதத்தை கடத்தினால் சரி நாடு இந்த மாதத்துக்குள் படு பாதாளத்தில் விழுந்து விடும். என்னை பொறுத்த வரையில் "அல்லாஹ்வின் நாட்டம் எப்படியோ அப்படியே. அவன் தான் ஆட்சியை கொடுப்பவனும் மற்றும் எடுப்பவனும் அவனே"

    ReplyDelete

Powered by Blogger.