Header Ads



அரசியல்வாதிகளுக்கு ஆருடம்கூறும் சோதிடரினால், தன் வீட்டை காப்பாற்ற முடியவில்லை

அனுராதபுரத்தில் உள்ள பிரபல பெண் சோதிடரின் ஆலயத்தை இனந்தெரியாத சிலர் தீவைத்து எரித்துள்ளனர்.

இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து அரசியல்வாதிகளும் தமது அரசியல் எதிர்காலம் குறித்து, பெண்ணிடம் கேட்டுறிந்து வருகின்றனர்.

இந்த ஆலயத்திற்கு அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த பெண் சோதிடர் கூறும் அரசியல் எதிர்வுகூறல்கள் மிகவும் பிரபலமானவை.

அண்மையில் அவர் வெளியிட்ட அரசியல் எதிர்வுகூறல்கள் காரணமாக பெண் சோதிடருக்கு பல தரப்பில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தனது ஆலயம் தீ வைக்கப்பட்ட நிலையில், பெண் சோதிடர் அது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எடுக்காது கடவுள் மீது நம்பிக்கை வைத்து தனது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச உட்பட பலர் முக்கிய அரசியல்வாதிகளின் ஜாதகத்தை இந்த பெண் சோதிடரே கணித்து கொடுத்துள்ளார்.

இலங்கை அரசியல்வாதிகள் சோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அவர்கள் வழங்கும் ஆலோசனைக்கு அமையவே ஆட்சி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆயிஷா(ரலி) கூறினார், இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள்:

    'அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    மக்கள்,  'இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோதிடர்கள் சிலவேளைகளில் எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)' என்று கேட்டார்கள்.

    அதற்கு இறைத்தூட்ர்(ஸல்) அவர்கள் , 'அந்த உண்மையான சொல்' ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் அதைப் போட அதனுடன் அவர்கள் நூறு பொய்களைக் கலந்து விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

    அறிவிப்பாளர் அலீ இப்னு அல்மதீனீ(ரஹ்)
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்- ஹதீஸ் எண் 5762

    ReplyDelete

Powered by Blogger.