May 04, 2018

தந்தைமார்களினால் சிறுமிகளுக்கு, நடந்த அக்கிரமம்

தமது பெண் பிள்ளைகள் இருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையர்கள் இருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவிகளான 14, 15, 16 வயதுகளையுடைய சிறுமிகளுக்கு ஆபாச படங்களைக் காண்பித்து, அவர்களை சொந்த தந்தையர்களே பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர்.

தொடர்ச்சியாக நீடித்து வந்த தந்தையர்களின் கொடூர செயலினால், உள மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் திடீர் என தீர்மானம் ஒன்றினை எடுத்தனர்.

தந்தையர்களுடன் தொடர்ந்து இருந்தால், மேலும் ஆபத்தினை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனப் பயந்து, வீட்டுக்குத் தெரியாமல் கொழும்புக்குத் தப்பி வந்துள்ளனர்.

கொழும்புக்கு வந்த சிறுமிகள் எங்கு செல்வது, என தெரியாது தடுமாறிக் கொண்டிருந்தமையைக் கண்ட பொலிஸார் அவர்களை நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

சிங்கள மொழி தெரியாததால் பொலிஸாரின் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இதனையடுத்து சிறுமிகளை தனியே ஓர் அறையில் பொலிஸார் தங்கவைத்துள்ளனர்.

அதேவேளை சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட அறையில் சி.சி.ரி.வி. கெமரா மற்றும் குரல் பதிவு செய்யும் கருவிகளையும் பொலிஸார் பொருத்தினர்.

இதனையடுத்து சிறுமிகள் உரையாடுவதனை பதிவு செய்து கொண்ட பொலிஸார், அதனை செவியுற்ற போதே தந்தையர்களிடம் பாலியல் துன்பங்களை அனுபவித்த விடயம் அம்பலமாகியது.

இந்நிலையில், நுவரெலியா பொலிஸாருக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டு தந்தையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு உடந்தையாக செயற்பட்ட தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் குறித்த தந்தையர்களுக்கு ப்ளு ஃபில்ம் (ஆபாச படம்) சீ.டி.களை வழங்கிய தோட்ட காவலாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

6 கருத்துரைகள்:

Please don´t publish this kind of disguss news our muslims website.

These type of news should not publish...the result and reaction of this kind news have positive and negatives..but negative side is more...all remember what hapen to " Seya"a small child case..what hapn to that...people and media talkd a lot in those period but now????still these kind of crimes increasing only...

தனி அறையில் சிறுமிகள் சிங்களத்திலா பேசியிருக்கிறார்கள்?

இந்த மாதரியான newsகளைப் போட்டு இந்த இஸ்லாமிக் websiteட் அசிங்கத்தை அள்ளி மேலே சிக்கொள்ள வேண்டாம் please...

இப்படிப்பட்ட நிகழ்வுகள் தாராளமாகவே நடக்கின்றன இன்றய சமுதாயங்களில், எல்லாமே வெளியில் வருவதில்லை, காரணம் இது சமுதாய சீர்கேட்டுக்கு மேலும் ஒரு உந்துதலாக அமைந்துவிடும். எவ்வாறு கணவன் மனைவிக்கிடையிலான காட்டில் சம்பந்தம் வெளியில் பேசிக்கொள்ளக்கூடாதோ அதேபோன்றுதான் இது போன்ற சமுதாய சீர்கேடான விஷயங்களும் மழுப்படிப்பு செய்யப்படல் வேண்டும். போலீசார் நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு நின்று கொள்ளுவதுதான் சிசிறந்தது. இவைகளை பத்திரிகைகளில் பிரசுரித்து அந்த அப்பாவி பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சீறழிக்கின்றோம்.

Shameful news should not be publish in Jaffna Muslims..

Post a Comment