Header Ads



மஹிந்தவையே வீட்டுக்கு அனுப்பிய மக்களுக்கு, தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் சேவை செய்ய வேண்டும்

உரிய வளர்ச்சி ஏற்பாட்டால் நாட்டில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

தலவாக்கலை சுமன சிங்கள வித்தியாலயத்தில் இன்று (14) இடம்பெற்ற சித்திரம் மற்றும் பத்திரிகை கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மாணவர்களின் வாசிப்புத்திரன் மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆர்.பி. ஜயந்தவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் கண்காட்சியில் அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது, 

"மாணவர்கள் தாய் மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பொது மொழியான ஆங்கில மொழிக்கு நாடளாவிய ரீதியில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் அளவிற்கேனும் வளர்ச்சியடைந்துள்ளனரா என பார்க்க வேண்டும்." 

மேலும், வளமான ஆசிரியர்களை உருவாக்கும் பொறுப்பு அதிபர்களினதோ பெற்றோர்களினதோ அல்ல, அது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். உயர்தரம் கற்றவுடன் இலகுவில் தொழில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அதேபோல சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு விதமாகவும் சாதாரண மக்களுக்கு ஒரு விதமாகவும் தற்போது காணப்படுகின்றது. எனக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், நாட்டில் நீண்டகால யுத்ததை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ்வையே மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது வரை காலமும் நமது மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அறியமுடியவில்லை, அதனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு சரியான சேவையை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 

(இராமச்சந்திரன்)

No comments

Powered by Blogger.