Header Ads



பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால், ஜனாதிபதியின் (மேலதிக, தனிப்பட்ட) செயலாளர் கைது

ஜனாதிபதியின் மேலதிக மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி 10 நபர்களிடமிருந்து பணம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 29 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளலர் ஒஸ்டின் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி செயலாளர் என போலியாக உள்ளர்களுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

அதனடிப்படையில் சந்தேக நபர் பயன்படுத்திய பல கையடக்க தொலைபேசிகளை பரிசோதித்ததன் அடிப்படையில் நேற்று இரவு (07) எஹெலியகொட, பனாவல பகுதியில் வைத்து ஹிதெல்ல ஆராச்சிகே தொன் மகேஷ் முதித குமார எனும் 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் இருந்து மோசடி செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட 3 சிம் அட்டைகளும், வெவ்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளும், மேலும் சில பத்திரங்களும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர் வசந்த குமார ரணசிங்க எனும் போலிப் பெயரில் ஒரு முறை ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், இன்னொரு முறை தனிப்பட்ட செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். 

அவ்வாறு கடமையாற்றிய சந்தேகநபர் துறைமுகம், பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வாங்கித்தருவதாகவும் கொரியா நாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும் கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இவ்வாறு வேலை வழங்குவதாக கூறிய பலர் இருப்பதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், குறித்த சந்தேகநபர் சில காலம் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரை இன்று (08) அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சந்தேகநபரிடம் பணம் வழங்கி ஏமாற்றப்பட்டவர்கள் யாராவது இருப்பின் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளார். 

தொலைபேசி - 0112321839 பெக்ஸ் - 0112384403

No comments

Powered by Blogger.