Header Ads



இறைவனே களமிறங்கி 'ஸ்கோர்' தரும் அதிசயம் பார்


- பர்சானா றியாஸ் -

றமழான் என்ற மாதத்தின் 
ஆத்மீகப் போட்டியிது
சக்தியுள்ளோர் யாவருமே 
பங்கு பற்றும் நேரமிது

வேகப்பந்தோ சுழற்பந்தோ 
எதிர்கொள்ளத் துணிவுடன் 
களமிறங்கிய அணி நாங்கள் 

பொறுமைத் துடுப்பதனை
கையிலெடுத்து ஆடுவதால் 
ஆட்டமிழப்பு ஏதுமில்லை

வயிற்றுப் பசியடக்கி 
ஆன்மீகம் புசித்ததனால் 
ஓட்டக் குவிப்பிலும் 
பஞ்சமில்லை 

தன்னடக்கம் கற்றதனால் 
பிடிகொடுப்பிற்கிடமில்லை 

நாவடக்கம் பேணியதால் 
நான்கு 'ரன்' னும் தவறவில்லை

'பவர்பிளே' ஆட்டங்களில் 
நிதானத்தை இழந்ததில்லை

'போல்ட்' முறை ஆட்டமிழந்தும்
நம்பிக்கை தளரவில்லை 

'அகலப்பந்து' வாய்ப்பெல்லாம் 
படைத்தவனைப் புகழவே 

'நோபோள்' தருணமெலாம் 
பேரன்பை உணரவே

'சிக்ஸர்' களாய் உயர்கின்றன 
மறைத்துக் கொடுத்த தருமங்கள்

இரட்டைச் சதம் அடிக்கிறது 
இரந்து கேட்ட பிரார்த்தனைகள்

அவனுக்காய் விழித்த சஹர் 
'ரையான்' வாயில் நுழைவாகலாம் 
வீழ்த்தப்படாத விக்கெற்றுக்களை  அணியோடங்கு சுவைத்திடலாம்

இறைவனே களமிறங்கி 
'ஸ்கோர்' தரும் அதிசயம் பார்

அவணமாய் அள்ள அள்ள 
சுவனமாய் ஒளிருது பார்

'கெப்டன்' என்ன மற்றோரென்ன வேறுபாடேதுமின்றி 
எம்மை 'வெல் பினிஸர்' ஆக்கிடவே
வந்துபோகும் தங்க நோன்பு


No comments

Powered by Blogger.