Header Ads



மக்களை எச்சரிக்கையுடன் இருக்க பணிப்பு, முப்படையினரும் தயார் நிலையில்


நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங், களு, களனி, அத்தனகலு ஓய மற்றும் மா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதனால் பின்வரும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

நில்வளா - மாத்தறை, கடவத் சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுபிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகள். 

கிங் - பத்தேகம, போப்பே, போத்தல, வெலிவிட்டிய, திவிதுர, நாகொட, நியகம, தவலம, நெலுவ பிரதேச செயலக பிரிவுகள். 

களு - களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள். 

களனி - கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவெல, ஹன்வெல்ல, தொம்பே, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, தெரணியகலா பிரதேச செயலக பிரிவுகள். 

அத்தனகலு ஓய - நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவுகள். 

மா ஓய - பன்னல, திவுலப்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள்.

2

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக இலங்கை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் விஷேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

அதனடிப்படையில் இலங்கை இராணுவத்தினரால் 5 மாகாணங்களுக்க 27 குழுக்கள் தற்போது காலி, களுத்துறை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

1 comment:

  1. பாராளுமன்றத் 'தரையி'ல் உட்கார்ந்து முஸ்லிம் MP க்கள் 'தலை'வரின் கவனத்தை ஈர்த்தபோதும்,  பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கை எடுக்கப்படாத 'திகண'யில் வெறும் சொற்ப காடையர் படைதான் இருந்தது.

    ஆனால், இப்போது முப்படைகளும் தயார் நிலையில், யாரது படையை எதிர்கொள்ள?

    ReplyDelete

Powered by Blogger.