Header Ads



பள்­ளி­வா­சல்­க­ளுக்கு தாம­த­மின்றி நஷ்­ட­ஈ­டு­ வழங்­கு­ங்கள் - ரிஸ்வி முப்தி

கண்டி வன்­செ­யல்­க­ளின்­போது இன­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு தாம­த­மின்றி நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி புனர்­வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இதே­வேளை, பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு நல்­கு­மாறும் அவர் முஸ்லிம் அமைச்­சர்­களைக் கோரி­யுள்ளார்.

வன்­செ­யல்­க­ளின்­போது சேத­மாக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் தொடர்பில் விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி இதனைத் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;

நோன்பு காலத்­துக்குள் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட்­டு­விடும் என புனர்­வாழ்வு அமைச்சர் தெரி­வித்­தி­ருந்­தாலும் இது­வரை 3 பள்­ளி­வா­சல்­க­ளுக்கே தலா ஒரு இலட்சம் ரூபா­வுக்கும் குறை­வான நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்­டுள்­ளது. நாளை புனித நோன்பு ஆரம்­ப­மா­க­வுள்­ளதால் சேத­மாக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­கள் நோன்பு கால மத நிகழ்­வு­க­ளையும், விசேட தொழு­கை­க­ளையும் மேற்­கொள்­வதில் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது.

சில பள்­ளி­வா­சல்கள் நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொள்­வ­தற்கு தேவை­யான தக­வல்­களை இது­வரை புனர்­வாழ்வு அமைச்­சுக்கு அனுப்­பி­வைக்­க­வில்லை என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. எனவே பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி தாம­த­மின்றி நஷ்­ட­ஈ­டு­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்றார்.

நஷ்­ட­யீடு விண்­ணப்­பங்­களின் குறை­களே தாம­தத்­திற்கு காரணம்

கண்டி வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு­களை வழங்­கு­வ­தற்கு புனர்­வாழ்வு அமைச்சு தயார் நிலையில் இருக்­கி­றது. ஆனால் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான தேவை­யான விப­ரங்­களை இது­வரை வழங்­க­வில்லை. நஷ்ட­ஈடு கோரும் விண்­ணப்­பத்தில் பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன என புனர்­வாழ்வு வடக்கு அபி­வி­ருத்தி மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து சமய விவ­கார அமைச்சின் மேலதிகப் பணிப்­பாளர் எஸ்.எம்.பதுர்தீன் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கண்டி வன்­செ­யல்­க­ளின்­போது 20 பள்­ளி­வா­சல்கள் சேதங்­க­ளுக்­குள்­ளா­கின. இவற்றில் 3 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்­டு­விட்­டது. எஞ்­சி­யுள்ள 17 பள்­ளி­வா­சல்­களில் 3 பள்­ளி­வா­சல்­களின் நஷ்­ட­ஈடு விண்­ணப்­பப்­பத்­தி­ரமே அனைத்து தக­வல்­க­ளுடன் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அந்த மூன்று பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் தாம­த­மின்றி நஷ்­ட­ஈடு வழங்­கலாம்.

14 பள்­ளி­வா­சல்­களின் விண்­ணப்­பங்கள் நிலு­வையில் உள்­ளன. பள்­ளி­வா­சல்­களின் பதி­வி­லக்கம், வங்கி கணக்­கி­லக்கம் குறிப்­பி­டப்­ப­டாமை, தேவை­யான அறிக்­கைகள் இணைக்­கப்­ப­டாமை கார­ண­மாக இவற்­றுக்கு நஷ்­டஈடு வழங்­கு­வதில் தாமதம் ஏற்­ப­டு­கி­றது.

பள்­ளே­க­லை­யி­லுள்ள லாபீர் ஜும்ஆ பள்­ளி­வா­சலே முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளது. இச்­சேதம் 5 இலட்­சத்­துக்கு மேற்­பட்ட சேதங்­க­ளுக்­குள்­ளான சொத்­து­களின் கீழே வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 5 இலட்­சத்­துக்கு மேற்­பட்ட நஷ்­ட­ஈடுகள் வழங்­கு­வ­தற்­கான சிபார்­சு­களைச் செய்­வ­தற்கு குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அக்குழு சேத விபரங்களை மதிப்பீடு செய்ததன் பின்பு நஷ்டஈடு வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தமது நஷ்டஈடு விண்ணப்பங்களிலுள்ள குறைகளை பூர்த்திசெய்வதன் மூலம் தாமதமின்றி நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
-Vidivelli

No comments

Powered by Blogger.