Header Ads



சிரியா அதிபருக்கு, இஸ்ரேல் மிரட்டல்

சிரியாவின் பிராந்தியத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை அச்சுறுத்த இரான் படைகளை அனுமதித்தால் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கும் அவரது ஆட்சிக்கும் அது முடிவாக இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யுவல் ஸ்டீனிட்ஸ் கூறியிருக்கிறார்.

இரான் அல்லது அதன் சார்பிலான படைகளின் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகிவருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

சமீபத்தில் சிரியாவில் உள்ள தமது ராணுவத் தளங்களின் மீது, இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பழிவாங்கப் போவதாக இரான் சமீபத்தில் சூளுரைத்திருந்தது.

சிரியாவில் இருந்து தாக்குதல் நடத்த இரானால் முடியும் என்றால், அது அசாத் மற்றும் அவரது அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்றுஸ்டீனிட்ஸ் கூறினார்.

சிரியா உள்நாட்டுப் போரில் அதிபர் அசாத்துக்கு ஆதரவளிக்கும் இரான், தனது துருப்புக்களையும், ஆதரவு குழுக்களையும் அனுப்பியிருக்கிறது.

இரானிய ராணுவம், இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு அப்பால் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் என்று இஸ்ரேலியர்கள் கவலைப்படுகின்றனர்.

1 comment:

  1. Occupied Israel is piece of cake one fire cracker enough to wipe out from the world map.
    Bullied Israel coming with US, Uk, France etc, what a shame. is it brave? because fear of Iran.

    ReplyDelete

Powered by Blogger.