May 20, 2018

சு.க. யில், சூடுபிடிக்கும் கொந்தளிப்பு

சுதந்திரக் கட்சிக்குள் எழுந்திருக்கும் ஆயிரம் பிரச்சினைகள். இன்னும் வளர்கிறதே தவிர குறைந்தபாடில்லை. அரசிலிருந்து வெ ளியேற வேண்டும் என்பதில் 16 பேர் குழு விடாப்பிடியாக இருக்கிறது. மறுபக்கம் அமைச்சு பதவி வகிக்கும் தரப்பு 2020 வரை தொடர வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளது. திரிசங்கு நிலையில் இருக்கும் ஜனாதிபதி இதில் எந்தப் பக்கம் சாய்வது என குழம்பியுள்ளதாக தெரிய வருகிறது. தங்களது நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதி இருக்கிறார் என இரண்டு தரப்பும் மாறி மாறி அறிக்கைவிட்டு தங்களுக்கு தாங்களே மனஆறுதல் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது.
இந்த பிரச்சினை ஒருபக்கமிருக்க சு.க செயலாளரையும் ஜ.ம.சு.மு செயலாளரையும் மாற்றும் போராட்டம் மறுபக்கம் சூடு பிடித்துள்ளது. இவர்கள் ஐ.தே.கவுக்கு சார்பாக செயற்படுவதாக 16 பேர் குழு வெ ளிப்படையாக சாடி வருகிறது.
இந்த நிலையில் சு.க மத்திய குழு கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கூடியது. மேற்படி பிரச்சினைகளும் ஆராயப்பட்டதாம்.
சு.க அரசாங்கத்திலிருந்து வெ ளியேற வேண்டும் என்ற யோசனையை முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தான் முன்வைத்தாராம்.இவர் மஹிந்த சார்பு குழுவுடன் இணைய வேண்டும் எனவும் கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளாராக வேண்டும் என்றும் கூறி வருபவர்.இவரின் நிலைப்பாட்டில் 16 பேர் குழுவிலுள்ள ​அநேகர் இல்லாத போதும் அரசிலிருந்து வெ ளியேற வேண்டும் என்பதில் 16 பேர் குழுவில் அனைவரும் உறுதியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஆளும் தரப்பிலுள்ள 23 பேரும் தான் அரசிலிருந்து வெ ளியேறுவது பற்றி முடிவு செய்ய வேண்டும் என மத்திய குழுவில் முடிவானதாம். இது தொடர்பில் முடிவு எடுக்க அவர்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதே வேளை அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை துரிதமாக சமர்ப்பிக்கவும் ஜனாதிபதி இங்கு பணித்தாராம்.
மத்திய குழுவில் 16 பேர் குழுவிலுள்ள 9 பேர் தான் உள்ளனராம். அகில இலங்கை செயற்குழுவின் அனுமதியுடனே மேற்கொள்ளப்பட இருப்பதோடு இதில் 16 பேர் குழுவில் சிலர் மட்டுமே உள்ளனர்.இதனால் வெ ளியேறும் முன்னெடுப்பு தோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் சில காலம் இருந்து ஜனாதிபதியின் எஞ்சிய முக்கிய திட்டங்களை நிறைவேற்றிய பின்னர் வெளியேற வேண்டும் என சு.கவில் ஒரு தரப்பு கூறி வருவதாக தகவல்.
இது இவ்வாறிருக்க சு.க உயர் பதவிகளில் தற்காலிக மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் திகதி புதிய நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட உள்ளது.இதன் போது செயலாளர் பதவியிலும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆம் திகதி நிறைவேற்றுக் குழு கூடி இது தொடர்பில் முடிவு செய்ய இருக்கிறது.
16 பேர் குழுவை தக்கவைப்பதற்காக இந்த தற்காலிக மாற்றம் இடம்பெற இருப்பதாகவும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிரந்தரமான மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இது தவிர ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் கூட்டங்களை கூட்டி கீழ் மட்ட கருத்துக்களை உள்வாங்கவும் கட்சி முடிவு செய்துள்ளது.
ஐ.ம.சு.மு. செயலாளர் பதவியை மாற்றுமாறு சு.க 16 பேர் குழு மட்டுமன்றி ஒன்றிணைந்த எதிரணியும் கூறி வரும் நிலையில் அதிலும் தற்காலிக மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 கருத்துரைகள்:

இந்த m3 கொண்டுவந்தது கட்சியை வளர்கவோ அல்லது திரிசங்கு நிலையில் இருக்கவோ அல்ல மாறாக நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்ற நல்ல நோக்கில் இவரை தெரிவு செய்து கதிரையில் அமர்த்தியது ஆனால் நடந்ததோ ,நடக்கின்றதோ வேறு (அட்டையெய் தூக்கி மெத்தையில் வைத்த கதைதான் இவருக்கு வாக்கு அளித்த 60% மக்களின் கதை )

Well said Ishak.
முதுகெலும்பில்லாத MY3, இந்த 16 பேரும் ராஜபக்ச வாலுகள், இது புரிந்தும் இன்னும் MY3 இந்த 16 பேரையும் வைத்து தாலாட்டுவது அவரது தலைமைத்துவத்தில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்பதை தான் குறிக்கிறது. மைத்திரி ஒரு கட்டத்தில் ராஜபக்சவிடம் சரணாகதி அடைவார் அல்லது ஒய்வு பெற்றுக் கொண்டு SLFP ஐ ராஜபக்ச அன் கோவிடம் கொடுத்து விடுவார். ஆக UNP இக்கு சவாலான கட்சி ராஜபக்ச அன் கோ தான்.

Post a Comment