Header Ads



சவூதியில் ஹஜ் சேவைக்கு வரி - கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

சவூதி அரே­பிய அரசு இவ்­வ­ருடம் ஹஜ் சேவை­க­ளுக்கு 5 வீத வரி அற­விடத் தீர்­மா­னித்­துள்­ளதால் ஹஜ் கட்­ட­ணங்கள் அதி­க­ரிக்கும் வாய்ப்பு உள்­ள­தாக ஹஜ் முகவர் நிலை­யங்கள் தெரி­வித்­துள்­ளன.

அத்­தோடு மினாவில் ஹஜ்­ஜா­ஜிகள் தங்­கு­வ­தற்­காக இது­வரை காலம் வழங்­கப்­பட்டு வந்த கூடா­ரங்­களில் அடுக்குப் படுக்கைள் (Bunk Set) அமைப்­ப­தற்கும் சவூதி ஹஜ் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. எனவே மினாவில் கூடா­ரங்­க­ளுக்­கான கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்கும் எனவும் ஹஜ் முகவர் நிலை­யங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத்தை தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது சவூதி அரே­பியா ஹஜ் சேவை­க­ளுக்கு 5 வீத வரி அற­வி­டப்­ப­ட­வுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தினார். அத்­தோடு மினா கூடா­ரங்­களில் அடுக்கு படுக்­கைகள், கட்­டில்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

புதிய முறை கோட்டா பகிர்­வினால் உப முக­வர்­களின் ஆதிக்கம் மேலோங்­கி­யுள்­ள­தா­கவும், உப முக­வர்கள் ஹஜ் யாத்­தி­ரி­க­ளி­ட­மி­ருந்து கடவுச் சீட்­டு­களைச் சேக­ரித்­துக்­கொண்டு இவ்­வ­ருடம் அனு­ம­திப்­பத்­திரம் பெற்றுக் கொண்­டுள்ள ஹஜ் முக­வர்­க­ளிடம் பேரம் பேசு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கரீம் லங்கா ஹஜ் முகவர் நிலை­யத்தின் உரி­மை­யாளர் ஏ.சி.பி.எம்.கரீம், இது தொடர்பில் விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கையில்; “புதிய கோட்டா பகிர்வு முறை­யினால் உப முக­வர்­களின் ஆதிக்கம் அதி­க­ரித்­துள்­ளது. ஏறாவூர் மற்றும் திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த உப முக­வர்கள் தலா 20 கட­வுச்­சீட்­டு­களை ஹஜ் யாத்­தி­ரி­க­ளி­ட­மி­ருந்து சேக­ரித்துக் கொண்டு ஒரு கட­வுச்­சீட்­டுக்கு 50 ஆயிரம் ரூபா வழங்­கும்­படி பேரம் பேசு­கி­றார்கள். இவ்­வா­றான நிலை­யி­னாலும் ஹஜ் கட்­டணம் அதி­க­ரிக்கும் வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது” என்றார்.

இதே­வேளை ஹஜ் பய­ணத்­துக்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள யாத்­தி­ரி­கர்கள் எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் தமது கட­வுச்­சீட்­டு­களை உப முக­வர்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டாம் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

திணைக்­க­ளத்­தினால் இவ்­வ­ருடம் நிய­மனம் பெற்­றுள்ள ஹஜ் முகவர்களிடம் மாத்திரமே கடவுச்சீட்டுகளை ஒப்படைக்கும்படியும் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத ஹஜ் யாத்திரிகர்கள் தொடர்பில் திணைக்களம் எவ்வித பொறுப்பினையும் ஏற்காது எனவும் கூறியுள்ளார்.

-ARA.Fareel-

1 comment:

  1. May be they need to buy more weapons and they need more money ...

    ReplyDelete

Powered by Blogger.