Header Ads



கொழும்பு முஸ்லிம், மகளிர் கல்லூரிக்கு பிரதமர் பாராட்டு


(அஷ்ரப் ஏ சமத்)

இந்த நாட்டில் உள்ள அரச பாடசாலைகளுல் கொழும்பு முஸ்லீம் மகளிா் கல்லுாாியின் அருகாமையில் தணியாா் காணியைப் பெற்று ஒர் உயா்ந்தகட்டிடம் (8 மாடிகள்) உள்ள ஒரே ஒரு பாடசாலை முஸ்லீம் மகளிா் கல்லுாாி  மட்டுமேயாகும் கொழும்பில் வாழும்  முஸ்லீம் சமுகத்தின் மகளிா்களது கல்விக்காக  இவ்வாறு உதவிசெய்த நன்கொடையாளா்களை நான் பாராட்டுதலும் நன்றியையும் தெரிவிப்பதோடு  இப் பாடசாலைக்காக இவ்வாறு உதவி செய்வது ஏனைய சமுகத்தினா்களுக்கு ஒரு முன் உதாரணமாகும். என பிரதமமந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாா்.

நேற்று முன்தினம் 13 பம்பலப்பிட்டியில் உள்ள முஸ்லீம் மகளிா்கல்லுாாியின் 8 மாடிகளைக் கொண்ட கட்டடித்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே  பிரதமா் ரணில் விக்கிரமசிஙக் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.  

இந் நிகழ்வு கல்லுாாி அதிபா்  ரஸ்மியா அபுபக்கா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா்கள் முஜிபு ரஹ்மான், எஸ்.எம் மரிக்காா், மலேசியா நாட்டுக்கான துாதுவா் ஏ.ஜே.எம். முசம்மில், பழைய மாணவிகள் சங்கத்தின் உபதலைவா்  பேரோசா முசம்மில் கட்டிடத்திற்காக நன்கொடை வழங்கிய  இல்யாஸ் அப்துல் கரீம், முன்னாள் பிரதி மேயா் அசாத் சாலி உட்பட கல்லுாாியின் பெற்றறோா் அபிவிருத்திக் குழு  மாணவதலைவா்கள்,  முன்னாள் அதிபா்கள் ஆசிரியைகள் மற்றும்  பழைய மாணவிகளும் கலந்து கொண்டனா். 

இக் கட்டிடம் 8 மாடிகளைக் கொண்டது. உயா்தர மாணவிகளுக்காக 35 வகுப்பறைகள், உயா்த்தி, நுாலகம், ஆய்வுகூடம், கூட்ட மண்டபம், கிழ் தரைகளில் வாகனத் தடிப்பிடம் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.  இந் கல்லுாாியின் ஆரம்ப நிகழ்வும் 2 மாடிகளை நிர்மாணிப்பதற்கும் டொக்டா் பஸ்லி நிசாா் ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடா்ந்து 8 மாடிவரை மெலிபன் காமான்ட் உரிமையாளா் இல்யாஸ் அப்துல் கரிம் உதவியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.