Header Ads



புலிப் பயங்கரவாதிகளை வீரர்கள் என நினைவுகூறுவார்களாயின், அவர்களைவிட கொடூரமற்ற சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்

புலிப் பயங்கரவாதிகளை வீரர்கள் என்று நினைவுகூர இடமளிக்கப்படுமாயின் அவர்களை விட கொடூரமற்றவர்களான அனைத்து சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எமது நாட்டு மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்தால் பரவாயில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார். யுத்தம் பற்றி தனக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது கட்சியை கைவிட்டு வந்து போருக்கு ஆதரவளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜித மறந்து விட்டாலும் ராஜிதவின் போர் எதிர்ப்பு முன்னணி மற்றும் வேறு அமைப்புகள், சர்வதேச சக்திகள் போர் வேண்டாம் என அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போதே நாங்கள் யுத்தம் செய்ய நேரிட்டது.

பயங்கரவாதத்தை போரில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று ராஜித என்னுடன் விவாதங்களில் கூட வாதிட்டார். அப்படியான ராஜித சேனாரத்ன, போரில் வெற்றி பெற்ற பின்னர் முப்பது ஆண்டு போர் முடிந்தது முப்பது ஆண்டுக்கு மன்னன் நீயே என்று எழுதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் தனது படத்துடன் பேனர்களை காட்சிக்கு வைத்தார்.

அமைச்சர் ராஜித புலிகளையும் ஜே.வி.பியினரையும் சமப்படுத்தி, ஜே.வி.பி.யினர் கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க முடியும் என்றால் புலிகளுக்கு ஏன் முடியாது என்று கேட்கிறார். இந்த இரண்டினதும் வேறுபாட்டை புரிந்துகொள்ள முடியாத ராஜித அமைச்சர் பதவியை வகிப்பது எமக்கு வெட்கத்தை ஏற்படுத்துகிறது. ஜே.வி.பி இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல.

ஆனால், விடுதலைப் புலிகள் இலங்கையில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட அமைப்பு. மேலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவே ஜே.வி.பி கிளர்ச்சி செய்தது. புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கம்யூனிச நாடுகள் உலகில் இருக்கின்றன.

ஜனநாயகத்திற்கு விரோதமாக புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினாலும் பின்னர் ஜனநாயக நாடுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் ஆட்சியை கைப்பற்றும் விதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் நாட்டின் ஒரு பகுதியை பிரிக்க கோரி போரில் ஈடுபட்ட மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பு. இதனால், புலிகளையும், ஜே.வி.பியினரையும் சமப்படுத்த முடியாது.
71 ஆம் ஆண்டு புரட்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி 89 ஆம் ஆண்டு இரண்டாவது புரட்சியில் ஈடுபட்டதுஇந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சிப் பெற இடமளிக்க தயாராக வேண்டாம் என புலிகளுக்கு பாலூட்ட முயற்சிக்கும் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு நினைவூட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

7 comments:

  1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:1)

    ReplyDelete
  2. உங்களுடைய பிறப்பிலே ஒரு சந்தேகம் உள்ளது. நீங்கள் எதோ ஒரு விதத்தில் தாய் வழியோ தந்தை வழியோ இஸ்லாமிய பிணைப்பை கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் தமிழர்களின் இறப்பிலும் இனவாதத்தை கக்கும் வல்லமை அவர்களிடமே உள்ளது. அது ஜே ர் ஜெயவர்த்தனே என்ற தெலுங்கு தோல் போதிய முஸ்லிமாக இருந்தாலும் சரி அல்லது மலே வழிவந்த மஹிந்தவானாலும் சரி.

    ReplyDelete
  3. Anushanth தமிழ் பயங்கரவாதியே... இலங்கையில் கொடூர தமிழ் பயங்கரவாத பேய்களை தவிர கொடூரர்கள் யாரும் இல்லை. அழிந்தும் உங்கள் பொறாமை உங்களை விட்டு போகவில்லையென்றால் நீங்கள் மனித பிறவியே அல்ல. சிங்களவன் என்றும் உங்களோடு கொஞ்சி குலாவி சோனி கதையை முடித்து விடுவானென்று கனவு மட்டும் காணாதீர். இடையில் இப்படி இப்படி சிங்களவர்களின் பேச்சடியை வாங்கி தான் ஆகவேண்டும்

    ReplyDelete
  4. பயங்கரவாத புலிகளை நினைவு கூறும் அனைத்து பயங்கரவாதிகளையும் பயங்கரவாத தடை சட்டத்தில் அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டும்

    ReplyDelete
  5. @Gtx & sampanthan tna, அது சரி.....

    ஆனால், நீங்க மட்டும், பலஸ்தீனியர்கள், ISIS, காஷ்மீரிகள், தலிபான்கள், சதாம் குசைன் என உலக முஸ்லிம் பயங்கரவாதிகள் எல்லாருக்கும் அழுது-ஒப்பாரி வைக்கிறீர்களே!.
    கூடாது தானே?
    நீங்க ஆளுக்கொரு நியாயம் சொல்கிறீர்களே.

    ReplyDelete
  6. இவனை ஆதரிக்கும் யானசாரவை போனவாரம் திருமலைக்கு சூ.ப அழைத்தீர், இப்ப கசக்குதோ???

    ReplyDelete

Powered by Blogger.