Header Ads



ரணிலின் பணிப்புரையின் மூலமே, இம்முறை பேரீச்சம் பழம் வழங்கப்படுகிறது


சவூதி அரபியா நாட்டு அரசாங்கத்தினால் வருடா வருடம் வழங்கப்படும் பேரீச்சம் பழம் கிடைக்கபப்தற்கு   தாமதம் ஏற்பட்டமையினால் முஸ்லிம்களுடைய நோன்பு காலத்தை கண்ணியப்படுத்தும் வகையில் பிரதமர் ரனில் விக்கிரமங்க பணிப்புரையின் மூலம் அரசாங்கத்தினால் இம்முறை பேரீச்சம் பழம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய நாட்டில் விளைச்சல் குறைந்துள்ளதன் காரணமாக அனுப்பி வைப்பதில் தாதமங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து அதற்கான பேரீச்சம் பழத்தை சதொச ஊடாகப் பெற்றுக் கொடுக்குமாறு என்னிடம் வேண்டிக் கொண்டார்  அதற்கு இணங்க அமைச்சரவையில் விசேட கெபினட் அனுமதிப் பத்திரத்தைப் பெற்று அரசாங்கத்தின் மூலமாக வழங்கி வைக்கின்றோம் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

முஸ்லிம் சமயம் காலாசார திணைக்களத்தின் ஏற்பாடட்டில் அரசாங்கத்தினால் முஸ்லிம்களுடைய நோன்புக்காக வழங்கப்பட்ட 250 டொன் பேரீச்சம் பழத்தை விநியோகிக்கும் வைபவம் கொழும்பு சதொச  நிலையத்தில் இன்று இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஏனைய பேரீச்சம் பழங்களை உரிய இடங்களுக்கு துரித கதியில் சகல பள்ளிவாசல்களுக்கும் விநியோகிக்கும் நடடிவடிக்கைகள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். எச். ஏ. பாஹிம் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மலீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி



2 comments:

  1. Ranil can fool the Muslim Ministers by giving these things.........

    ReplyDelete
  2. இந்த ஈச்சம்பழத்தை படத்திலிருப்பவர்களுக்கே கொடுப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இந்த ஈச்சப்பழம் இல்லாமல் நோன்பு நோற்கலாம். எனவே இங்கு எடுப்பவரும் கொடுப்பவரும் அவர்களுடைய சகாக்களும் தான் இலவச நோன்பு சேவையைப் பெற்றுக் கொள்ள மிகவும் பொறுத்தமானவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.