May 30, 2018

அருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)


பெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் "மாலிய அகதி" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின்றது.

இவன் தான் முஹம்மது கஸ்ஸாமா. பிரான்ஸ் நகரிலே , மூன்றாம் மாடியொன்றிலே குழந்தையொன்று தொங்கிக்கொண்டிருந்தது. எந்தக் கணமும் அது கீழே விழுந்து விடலாம் என்ற நிலை. பிரான்ஸ் மக்களெல்லாம் தீயணைக்கும் படை வரும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் , தன்னுயிரைத் துச்சமென மதித்து மாடிகள் தாவி ஏறிய உண்மையான "சூப்பர்மேன்".

முஹம்மது கஸ்ஸாமா மன்சா மூஸாவின் வாரிசு. பிரான்ஸு நகர மக்களெல்லாம் "குளிப்பது" தெய்வ குற்றம் என்று நம்பிக்கொண்டிருந்த 14ஆம் நூற்றாண்டில் , அறிவியல் , கல்வி , கலாச்சாரம் என்று பலதுறைகளில் கொடிகட்டிப்பறந்த மாலியப் பேரரசின் சந்ததி.

இன்றைய உலகின் முதல் பணக்காரன் ஜெப் பேசொஸ். இவருடைய சொத்துக்களின் மதிப்பு $100 பில்லியன்கள். ஆனால் , அந்த மன்சா மூஸாவின் சொத்து இன்று வரை சரியாக மதிப்பீடு செய்யப்பட முடியாதுள்ளது என்கின்றது லண்டனின் டைம்ஸ் பத்திரிகை. மதிப்பிட முடியாத சொத்துக்களின் சொந்தக்காரன் அவர். இவர் ஹஜ்ஜுக்காக எகிப்து வழியாகப் பயணித்தபோது அங்குள்ள ஏழைகளுக்கெல்லாம் தங்கக்காசுகளை அள்ளி வழங்கினார். இதனால் எகிப்திலே ஒரு பெரிய பணவீக்கத்தையே இவர் தோற்றுவித்தார். இதுவொரு வரலாற்று உண்மை.

இவ்வாறான பூர்வீகத்தைக் கொண்ட முஹம்மது கஸ்ஸாமா ஒரு அகதி அல்ல. பிரான்ஸ் நாடு மாலி நாட்டின்மீது மேற்கொண்ட காலனித்துவத்தின் பலியாள் (victim) அவன். ஏசி மாளிகைக்குள் இருந்து கொண்டு, மாலியில் உள்ள மக்களைக் கொள்வதற்காக கோழை மேக்ரோன் தன் வான்படைக்கு உத்தரவிட்டுக்கொண்டிருக்கையில், தன்னுயிரைத் துச்சமென மதித்து பிரான்சியப் பிள்ளையொன்றைக் காப்பாற்றிய வீரன் அவன்.

நினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா


6 கருத்துரைகள்:

மண்டையை போட்டு குழப்புகிறது செய்தி. தலையங்கம் என்ன செய்தி என்ன. முற்றுப் பெறாத மொழிபெயர்பு செய்திகளை இத்தளத்தில் பதிவேற்றி வாசகர்களை குழப்பாமல் இருந்தால் JM இன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

முஸ்லிமாக இருந்து கொண்டு நல்லது செய்தால் பாராட்டவோ பெயர் சொல்லவோ மாட்டார்கள், தீயதை செய்தால் இஸ்லாமிய அடிப்படைவாதி, தீவிரவாதி என்றெல்லாம் சொல்லும் உலக அடிப்படை ஒழுங்கு, விதிகளை பற்றி இன்னுமா விளங்கிக்கொள்ள வில்லை?

அனைத்தையும் இறைவனிடம் விட்டுவிடுவோம், அவனே போதுமானவன்.

AlHamdullillah May Allah Almighty bless Muhammad Gassama and his country.

ஐரோப்பியன் எப்படி அழைத்தாலும் நீங்கள் அலைக்கும் பாணி கேவலமாக உள்ளது. இவன் அவன் என்று சொல்லி ஒரு ஹிந்து தீவிர்வாதிய அலைக்குற மாதிரி......

Ridiculous Title.... Utterly misleading.....!!!!

Title should be corrected with an apology from this site first. it is very insulting and disrespectful to call our own brother in Islam such ugly words. When you have poor Tamil language skills, please ask someone to write it for you.
Until and unless you apologies for you wrong. Definitely Allah will not forgive you. because you heart entire Muslim populations heart.

Post a Comment