(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலனை திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் முல்லைதீவு.
அலம்பில் .கெனேடியன் வீதியைச்சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது வவுனியா.கிடாச்சூரி பகுதியைச்சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா என்ற 17 வயது பெண்னும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரும் காதலித்து வந்துள்ளனர்.
17 வயது பெண் இளைஞனின் வீட்டுக்கு வந்த வேளை முல்லைதீவு பொலிஸ் நிலையத்தில் பெண்னை
ஒப்படைத்த நிலையில் மீண்டும் இளைஞனை பிரித்து சம்பூர் பகுதியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டுற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அதனையடுத்து 17 வயது பெண் காதலனுக்கு தான் சம்பூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச்செல்லுமாறும் கோரியுள்ளார்.
இதேவேளை காதலனான பிரபாகரன் சம்பூர் பகுதிக்கு சென்று மோட்டார் தனது காதலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த வேளை பெண்ணின் உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்ததாகவும் தெரிியவந்துள்ளது.
இதேநேரம் மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயது பெண் வேகமாக செல்லுமாறும் பின்னால் சொந்தக்காரர்கள் வருவதாகவும் கூறிய போது காதலன் பின்னால் திரும்பி பார்த்த போது வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உரவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன் காயங்களுக்குள்ளான 23 வயதுடைய காதலன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது
1 கருத்துரைகள்:
என்னயா காதல், காதலன் ,காதலி இதுக்கு பொருத்தமான பேறு காமவெறி, காம வெறியன், காம வெறிச்சி.
Post a Comment