Header Ads



முஸ்லிம்களின் விவசாய காணிகளுக்குள், பிரதேச செயலகத்தின் அத்துமீறல்


குச்சவெளி பிரதேச முஸ்லிம்களின் விவசாய காணிகளுக்குள் ேகாமரங்கடவல பிரதேச செயலகத்தின்  அத்துமீறல்  முஸ்லீம்கள்  கண்டணம்   பிரதேச செயலாளர் . பிரதேச சபை தவிசாளரிடமும் மகஜர் கையழிப்பு 

குச்சவெளி  கள்ளம்பத்தை வீதியிலுள்ள 26 ,27,28. 29 ஆம் கட்டை  என்பது  குச்சவெளி பிரதேசத்திற்கும் கோமரங்கடவல பிரதேசத்தையும் பிரிக்கும்   எல்லைகளைக் கொண்டுள்ளது.  இங்கு   மூவித்தவர்களையும் ேசர்ந்தவர்களுக்கு விவசாயக் காணிகளுக்கான   உரித்தாவண அனுமதிப்பத்திரம் 1978   ஆண்டுக்கு முன்னர்வழங்கப்பட்டுள்ளன. 

இதேநேரம் அக்காகாலப் பகுதியில் குச்சவளி பிரதேச செயலகத்தினால்  மர முந்திரிகை கூட்டுத்தாதாபனாத்திற்கென காணியும் வழங்கப்பட்டுமர முந்திரிகையும் செய்கை பன்னப்பட்டுள்ளன.    

 கடந்த கால யுத்தம் காரணமாக இப்பிரதேச மக்கள் I990 களில் இடம் பெயர்ந்திருந்தனர். 30 வருட யுத்த காலம் செய்கை பண்ணப்படாத இவ்வயற்   காணிகள்  பற்றைக் காடுகளாகவும். முற்புதர்களாகவும் வளர்ந்து காணப்படுகிறது. 2015 மீளக்குடியேறிய இப்பிரதேச மக்கள்  எல்லைக் கிராமம்ஆலங்குளம் கை நாட்டான் போன்ற வயற்காணிகளை துப்பரவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர், இவ்வாறான நிலையில் கோமரங்கடவல பிரதேச செயலகம் யான் ஓயா குடியேற்றம் என்கின்ற பெயரில் ஏற்கனவே மரமுந்திதிரிகை கூட்டுத்தாபணத்திற்குரித்தான காணியை அபகரித்து சுவீகரித்துள்ளனர்.இக்காணிக்குப் பதிலாக குச்சவெளி பிரதேச எல்லை  வயல் நிலங்களுக்குள் அத்துமீறி முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளுக்கு எல்லையிட்டு மரமுந்திதிரிகை கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு அடையாளப்படுத்தியுள்ளார்கள். 

இதனைக் கண்டித்து காணி உரித்துடையவர்கள் இன்று புதன்கிழமை குச்சவெளி பிரதேச செயலாளர் திரு பி.தனேஸ்வரனைச் சந்தித்து எமது பிரதேச எல்லை ஆரம்ப காலத்தில் உள்ளதைப் ேபான்று எல்லையிட்டு தருமாறு கோரிக்கை விடுத்து    மகஜரும்கையழித்தனர். 

இன்றய தினம் பிரதேச சபை தவிசாளர் எம்.முபாரக் அவர்களையும் சந்தித்து இம்மகஜர் கையழிக்கப்பட்டது தவிசாளர் முபாரக் அரசாங்க அதிபர் அவர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக இதன் போது தெரிவித்தார், மாவட்ட பா.உ.களின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏ.எல்.றபாய்தீன்பாபு

No comments

Powered by Blogger.