Header Ads



இறையில்லங்களை பதிவு செய்யுங்கள் - அப்படிச் செய்யாமையால் ஏற்பட்ட பாதிப்பு

இது­வரை காலம் வக்பு சபையில் பதி­வு­செய்து கொள்­ளப்­ப­டா­துள்ள பள்­ளி­வா­சல்­களைத் தாம­த­மின்றி பதி­வு­செய்து கொள்­ளும்­படி வக்பு சபை பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

கண்டி வன்­செ­யல்­க­ளின்­போது பாதிக்­கப்­பட்­டுள்ள இது­வரை காலம் பதி­வு­களை மேற்­கொண்­டி­ராத பள்­ளி­வா­சல்­களின் பதி­வுகள் தொடர்பில் வக்பு சபை விஷேட கவனம் செலுத்தும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கண்டி, வன்­செ­யல்­க­ளின்­போது பாதிக்­கப்­பட்ட,  எரிக்­கப்­பட்ட 20 பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் கோரி புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம், வடக்கு அபி­வி­ருத்தி மற்றும் இந்து சமய விவ­கார அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள விண்­ணப்­பங்­களில் பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­வ­தா­கவும் சில பள்­ளி­வா­சல்கள் சட்ட ரீதி­யாக பதிவு செய்­யப்­பட்­டவை அல்­ல­வெ­னவும், சில­வற்­றுக்கு வங்­கிக்­க­ணக்­குகள் இல்லை எனவும் புனர்­வாழ்வு அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. இதனால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வதில் தாமதம் ஏற்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்­தது. பள்­ளி­வா­சல்­களின் பதி­வுகள் தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீனைத் தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது, வக்பு சபைக்கு பள்­ளி­வாசல் பதிவு தொடர்­பாக கிடைக்­கப்­பெற்ற விண்­ணப்­பங்கள் அனைத்தும் பரி­சீ­லிக்­கப்­பட்டு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்குப் பதிவு இலக்­கங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. பதி­வுக்­காக நிலு­வை­யி­லி­ருந்த விண்­ணப்­பங்கள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வா­சல்­களின் பதிவு கட்­டா­ய­மா­ன­தாகும். பதி­வின்றேல் சட்ட ரீதி­யான எந்த நகர்­வு­க­ளையும் முன்­னெ­டுக்க முடி­யாது. எனவே, பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பள்­ளி­வா­சல்­களின் பதிவு விட­யத்தில் கூடுதல் கவனம் செலுத்­த­வேண்டும். கண்டி வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட பதிவு செய்­யப்­ப­டாத பள்­ளி­வா­சல்கள் பதி­வுக்­கான விண்­ணப்­பங்­களை உட­ன­டி­யாக வக்பு சபைக்கு அனுப்பி வைக்­க­வேண்டும். பள்­ளி­வாசல் காணி உறுதி விட­யத்தில் சில பள்­ளி­வா­சல்­களில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன என்­பதை வக்பு சபை அறியும்.

பதி­வு­க­ளுக்­கான விண்­ணப்­பங்­களை பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் வக்பு சபைக்கு அனுப்பி வைத்­தால் அதி­லுள்ள குறை நிறை­களை வக்பு சபை நிர்­வா­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும். தேவை­யான ஆவ­ணங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வழி­காட்­டல்­க­ளையும் வழங்கும்.

முஸ்லிம்கள் தமது வியாபார ஸ்தலங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ளவேண்டும். பதிவுசெய்து தமது வர்த்தகங்களை நிறுவன மயப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதே அனர்த்தங்களின்போது நஷ்டஈடுகளை சட்ட ரீதியாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.
-Vidivelli

2 comments:

  1. IF ANY MOSQUE COMMITTEE FAILED TO CONFORM TO THIS BASIC REQUIREMENT IN RUNNING A MOSQUE, SUCH COMMITTEE IS NOT FIT TO BE TRUSTEES OF THE MOSQUE CONCERNED AND MUST BE SACKED AND REPLACED WITH KNOWLEDGEABLE AND EDUCATED MUSLIM TRUSTEES.

    ReplyDelete
  2. சட்டம் தன் கடமையைச் செய்யாததினால்தான் இத்துணை அனர்த்தங்களும் நடந்தேறி உள்ளன.
    இதற்கு மட்டும் ஏன் சட்டங்கள்?
    சட்டத்தை அமுல் நடாத்த முடியாதுபோன அரசின் இயலாமைக்கான மாற்றீடாக விசேட ஏற்பாடாக இந்த நஷ்ட ஏடுகள் 100% ஆக மிக விரைவாக வழங்கப்பட்டாக வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.