Header Ads



காஸாவில் இஸ்ரேல் அராஜகம், உலக தலைவர்களுடன் எர்துகான் ஆலோசனை

ஈராக், இந்தோனிஷியா, சூடான், கத்தார் போன்ற நாட்டு பிரதமர்களிடம் காஸா பிரச்சினை குறித்து எர்துகான் பேசிவருகிறார்.

காஸா பிரச்சினைக்கு ஒரு அமைதி நிலைபாட்டை முன்னெடுக்க இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெர்மன் அதிபர் அங்கேலாவுடன் தொலைபேசிய உறையாடிய எர்துகான் காஸாவின் தற்போதைய பதட்டமான சூழ்நிலையை எடுத்துரைத்தார்.

பாலஸ்தீன ஆர்ப்பாட்ட காரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் வெட்க கேடானவை என்று ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிய போது தெரிவித்தார். மேலும் மே 18 தேதி இஸ்தான்புல்லில் நடக்கவிருக்கும் OIC மாநாட்டிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தோனிஸியா மற்றும் சூடான் பிரதமர்களிடம் போனில் பேசிய எர்துகான் எல்லைப்பகுதியில் நடந்த கொட்டுர தாக்குதல் குறித்து விவரித்தார். மேலும் இஸ்தான்புல்லில் நடக்கவிருக்கும் OIC மாநாட்டில் இது குறித்தும், அமெரிக்காவின் ஜெருஸல ஆக்கிரமிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என்பதனையும் தெரிவித்தார்.

மேலும் ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ், மலேசிய பிரதமர், சவுதி மன்னர்களிடம் பேசிய எர்துகான் பாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும் என்றும், நடக்கவிருக்கும் OIC மாநாட்டில் இதுகுறித்து ஒரு உறுதியான தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கூறினார்.

அஷ்ரஃப் இஸ்லாம்

2 comments:

  1. ரொம்ப நல்லது. முதலில் உங்கட நாட்டில் உள்ள இஸ்ரேலின் இரானுவ பயிற்சி மையத்த மூடுங்க சீதவி பிறகு சேவல் வேல பாக்கலாம். இவ்வலவு காலமும் இவ்வலவு பிரச்சினை பலஸ்தீனில் நடக்கும்போது வைத்திருந்த தூதரக உறவுகளை இப்பதான் தற்காலிகமாக கொன்ஸலரை அனுப்பியுள்ளீர்கள் அத நிரந்தரமாக்குங்க. கூல்முட்டைகளுக்கு கஞ்சி ஊத்துர மாதிரி அடிக்கடி ஒரு அறிக்கைய விட்டுட்டு மறைந்துவிடுகிறீர்கள். மற்றது எல்லாமே முன்பிருந்தவாறே இருக்கிறது.

    ReplyDelete
  2. Where is Saudi? They have the moral obligation to protect innocent Palestinians and lead the protest against Israeli aggression. Have they already become pro Israelis?
    Thank god, at least Turkey has taken the lead.

    ReplyDelete

Powered by Blogger.