May 27, 2018

ஜம்இய்யத்துல் உலமாவின், அவசர கவனத்திற்கு..!

    எமது நாட்டில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு புனித  றமழான்   விடுமுறை வழங்கி, இந்த கண்ணியமான மாதத்தின் முழுமையான பயனை எமது இளம் சிறார்கள்  அனுபவிக்க வேண்டும் என்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எமது நாட்டின் அரசாங்கம்  காலாகாலமாக ஏற்படுத்திக்  கொடுத்து வருகிறது. 

      முஸ்லிம் பாடசாலைகளுக்கு அரசாங்கம் விடுமுறை வழங்கியது மாணவர்கள் றமழான் காலத்தின் பயனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் அதன் மூலம் நல்ல பயிற்சிகளை பெற வேண்டும் அதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்  என்பதற்காகவே.இதற்காக எமது முன்னோர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து இத்தகைய உரிமைகளை பெற்றுத்தந்தார்கள். 

ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட கவனத்திற் கொள்ளாமல் நோன்பு காலத்தில் ஆசிரியர்கள் வீட்டில் சும்மா இருந்து கொண்டு சம்பளம் பெறுவதை பொறுக்க முடியாத சில அதிபர்கள் மாணவர்களுக்கு கல்வி போய் சேரா விட்டாலும் பரவாயில்லை ஆசிரியர்களை அலைக்கழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். 

அரசாங்கம் வழங்கும் சம்பளத்தை தனது குடும்பத்தின் சொத்துக்களை விற்று வழங்குவது போன்ற நினைப்பில் தான்  இத்தகைய செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இன்று சில பாடசாலைகளில் அதிகாலை வேளையிலேயே பாடங்கள் நடக்கிறது.
ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக பாடங்கள் நடத்த அதிபர்களால் அழைக்கப்படுகின்றனர். 

இது விஷயத்தில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் எந்த ஒரு ஆலோசனை மற்றும் கருத்துக்கள் பெறாமல் 
சில அதிபர்கள் தன்னிச்சையாக தான் தோன்றித்தனமாக இந்த முடிவை எடுத்துள்ளது கண்டிக்கப்பட வேண்டிய தொன்றாகும். 

ஒரு சில அதிபர்களின்  இத்தகைய அடாவடித்தனமான செயற்பாடுகள் காரணமாக  காலப்போக்கில் ஒட்டு மொத்த
முஸ்லிம் பாடசாலைகளுக்கும் வழங்கப்படுகின்ற  றமழான் விடுமுறை இல்லாமல் போகலாம். இனவாதம் தலைவிரித்தாடும் இந்த சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி எமது சமூகத்தின் உரிமைகளை இல்லாமல் ஆக்கப் படலாம். 

மாணவர்களின் கல்வியில் இத்தகைய அதீத அக்கறை கொண்டு இருந்தால் 
றமழானை விட ஏனைய காலங்களில் வகுப்பறைகள் மற்றும் மாலை நேரங்கள் விடுமுறை நாட்கள் என்பவற்றை  சரியான முறையில் பயன்படுத்தினால் முஸ்லிம் மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகரிக்க முடியும். அத்துடன் இன்னும் எத்தனையோ திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். 

இந்த விஷயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மற்றும் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை களுக்கு பொறுப்பான கல்வி பணிப்பாளர் ஆகியோர் உடன் கவனம் செலுத்தி இவ்வாறான மேலதிக வகுப்புகளை உடனடியாக இடை நிறுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் இத்தகைய அடாவடித்தனத்தை மேற்கொள்ளும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9 கருத்துரைகள்:

Pvt School pora girls, werumadha padasalaiku pohum girls,tiution class pora girls zinah senjikondu kandy,colombo, innum sila districtla thiriranga adhuku anna solringa.

இதனை எழுதியவர் யார்? இவரும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்?

Muslim teachers are not honest in teaching, like any other person, they do extra classes for money for the same students they teach in school.

அர்த்தமற்ற கருத்துக்கள்.ரமழானில் ஏதோ முஸ்லிம் மாணவர்களுக்கு மேலதிக லீவு வழங்கப்படுவதாக கட்டுரையாளர் எண்ணுகிறார். இது அவரது அறியாமை. முஸ்லிம்,சிங்கள,தமிழ் மாணவர்கள் எல்லோருக்குமே பாடசாலை நாட்களின் எண்ணிக்கை ஒன்றுதான்.அவர்களுக்கு விடுமுறை வேறுகாலங்களில் வழங்கப்படுகிறது.அதிபர்கள் தங்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் கருதி நோன்புக்குப் பாதகமின்றி குறிப்பிட்ட நேரம் மேலதிக பாடங்களை ஒழுங்கு செய்கிறார்கள். இதிலென்ன தவறு? சோம்பேறிகளின் நொண்டிச் சாட்டுதான் இது.

ஆம், இதை எழுதியவரின் சொந்த நலன் தான் இங்கு பெரியதாக விவரிக்கப்படுவது போல் தெரிகிறது.

உண்மை.கவனிக்கப் பட வேண்டிய கட்டுரை

சமூக நலனில் அக்கறையற்ற, முற்று முழுதான, சுய லாபம் ஒன்றை மட்டுமே நோக்ககக் கொண்ட ஒரு ஆசிரியரின் கருத்து.
அதிபர் கட்டாயப்படுத்த முடியாது உமக்கு விருப்பமில்லை என்றல் துணிந்து சொல்லவேண்டியதுதானே

பாடசாலைகளில் வகுப்புக்கள் நடைபெறுவதால் இவர்களது ரியூசனுக்கு மாணவர்கள் வருவதில்லை எனும் கோபத்தினால் எழுதுகின்றார்கள் என நினைக்கின்றேன்.

மடத்தனமான பதிவு .ஏன் இவர்கள் டியூஷன் வகுப்பு நடத்துவதில்லையா

Post a Comment