Header Ads



இலங்கையில் பெளத்தம் நிலைநிறுத்தப்பட்டால் மாத்திரமே, நல்லிணக்கம் நிலைபேறாக இருக்கும்

இலங்கை எங்கும் பௌத்த கலாசாரம் நிலைபெற்றால் மட்டுமே நல்லிணக்கம் பாதுகாக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

பௌத்த கலாசார அடையாளங்களை நிர்மாணிப்பதற்கு தடைபோடும் எதுவித உரிமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இல்லை.

இந்நாடு பௌத்த நாடு. அரசாங்கம் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பது அரசியலமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்நாட்டில் இந்து, இஸ்லாமிய, கிறித்தவ மதங்களும் பின்பற்றப்படுகின்றன. அவற்றின் வணக்கத்தலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு பௌத்த தரப்பில் இருந்து எதிர்ப்புக் காட்டப்படவில்லை.

பௌத்தம் என்பது நல்லிணக்கமாகும். இலங்கையில் பெளத்தம் நிலைநிறுத்தப்பட்டால் மாத்திரமே நல்லிணக்கம் நிலைபேறாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Then why burnt many Mosques in Kandy incident?

    ReplyDelete
  2. First implement your Buddhist teaching of Ahimsa then think about culture

    ReplyDelete

Powered by Blogger.