Header Ads



கண்டி வன்முறை, நஷ்­ட­ஈடு வழங்­க தாம­திப்பது ஏன்..?

அண்­மையில் கண்டி மாவட்­டத்தில் இடம்­பெற்ற வன்­செ­யல்கள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக புனர்­வாழ்வு அமைச்­சுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள விண்­ணப்­பங்கள் பல பூர­ணத்­துவம் பெறாது குறைகள் காணப்­ப­டு­கின்­ற­மையே நஷ்­ட­ஈடு வழங்­கு­வதை தாம­தப்­ப­டுத்­தி­யுள்­ளது என புனர்­வாழ்வு, இந்து மத அலு­வல்கள், மீள்­கு­டி­யேற்றம் அமைச்சின் மேல­திக பணிப்­பாளர் எஸ்.எம்.பதூர்தீன் தெரி­வித்தார்.

கண்டி மாவட்­டத்தில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வதில் ஏற்­பட்­டுள்ள தாமதம் குறித்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கண்டி மாவட்­டத்தில் வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட 636 சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் கோரப்­பட்டு விண்­ணப்­பங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் பல விண்­ணப்­பங்கள் தேவை­யான தக­வல்கள் இன்றி காணப்­ப­டு­கின்­றன. வங்கி கணக்­கி­லக்கம், உரி­மை­யா­ளரின் பதிவு விப­ரங்கள் என்­பன போன்ற விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­ப­டாத விண்­ணப்­பங்கள் உரிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டுள்­ளன.

நஷ்­ட­ஈடு கோரப்­பட்­டுள்ள 636 விண்­ணப்­பங்­களும் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்பே இதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை அமைச்­சரால் சமர்ப்­பிக்க முடியும். அதனால் விண்­ணப்­பங்­களின் தக­வல்­களை பூர­ணப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் புனர்­வாழ்வு அமைச்சு ஈடு­பட்­டுள்­ளது.

636 பாதிக்­கப்­பட்ட சொத்­து­களில் 20 பள்­ளி­வா­சல்கள், 9 வாக­னங்கள், 271 வீடுகள், 331கடைகள் மற்றும் அற­நெறிப் பாட­சா­லைகள் அடங்­கு­கின்­றன. பாதிக்­கப்­பட்­டுள்ள 20 பள்­ளி­வா­சல்­களில் சில பள்­ளி­வா­சல்­களின் விண்­ணப்­பங்கள் பூர­ணத்­துவம் பெறா­துள்­ளன. அதா­வது பள்­ளி­வா­சலின் பதிவு இலக்கம் இன்மை, வங்கிக் கணக்­கின்மை என்­பன குறை­பா­டா­க­வுள்­ளன.

5 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட சேதங்­க­ளுக்­குள்­ளான சொத்­து­களின் மதிப்­பீட்டு பணிகள் இன்னும் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­மையும் தாம­தத்­திற்குக் கார­ண­மாகும். 5 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள சுமார் 120 சொத்­து­களில் 75 வீத­மா­ன­வையே மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளன. 25 வீத­மா­ன­வையின் மதிப்­பீ­டுகள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மதிப்­பீட்டு பணிகள் இவ்­வாரம் பூர்த்தி செய்­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஒரு இலட்சம் ரூபா­வுக்கும் குறை­வான சேதம் ஏற்­பட்­டுள்ள சுமார் 500 சொத்­து­களின் சேத மதிப்­பீடு பூர்த்தி செய்­யப்­பட்டு சுமார் 125 சொத்­து­க­ளுக்கு ஏற்கனவே நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 636 சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. விண்ணப்பங்களின் குறைபாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

-Vidivelli

1 comment:

  1. கண்டி முஸ்லீம் களே நீங்கள் ஓட்டு போட்டு அனுப்பிய அந்த அமைச்சரை ,,,,,,,, கேளுங்கள் ,

    ReplyDelete

Powered by Blogger.