Header Ads



அரச வைத்தியசாலையில், இப்படியும் ஒரு கொள்ளை

-Safwan Basheer-

இது மாத்தளை வைத்திய சாலையில்  நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

ஒரு தாயும் மகனும் ஒரு வாரம் ட்ரீட்மன்டுக்காக  வைத்தியசாலையில் தங்கியிருந்து இருக்கிறார்கள்.

பிறகு நோயும் குணப்படுத்தப்பட்டு டிகட் வெட்டி  வீட்டுக்கு போகச் சொல்லியிருக்கிறார்கள்.

வீட்டில் இருந்து அழைத்துச் செல்ல  ஆட்டோ வரும்வரை அந்த தாயும் மகனும் வைத்தியாசாலையில் காத்திருந்து இருக்கிறார்கள்.

அந்த நேரம் அவர்களிடம் ஒரு வைத்தியர்  வந்து "டிகட் வெட்டியாச்சா" என்று கேட்டுவிட்டு, வைத்தியர்கள் ஓய்வு பெறும் அறைக்கு தாயையும் மகனையும் வரச் சொல்லியிருக்கிறார்.

இருவரும் பதற்றத்துடன் சென்றிருக்கிறார்கள்.

மருத்துவச் சான்றிதழ்களை பார்வையிட்டு இருக்கிறார்.

பின்னர் அந்த தாயின் கழுத்தில் இருந்த மாலையைக் காட்டி, அழகாக இருக்கிறது, எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டு இருக்கிறார்.

உங்களது மாலையை ஒரு புகைப்படம் எடுத்து இது போன்ற ஒரு டிசைனில் எனது மனைவிக்கும் ஒரு மாலை  செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லி  இருக்கிறார்.

வைத்தியர்தானே கேட்கிறார் என்று இந்தப் பெண்ணும் மாலையைக் கழட்டி புகைப்படம் எடுக்க கொடுத்து இருக்கிறார்.

மாலை கையில் கிடைத்த உடன் ஒரே ஓட்டமாக  ஓடியிருக்கிறான் டாக்டர் வேசம் போட்ட அந்தக் கொள்ளைக்காரன்.

இந்த சம்பவத்தை ஒரு சிங்களப் பத்திரைகை செய்தியாக வெளியிட்டிருந்தது.

அதை வாசிக்கும் போது எனக்கு இந்த ஆறுநாள்  போலி வைத்தியர்கள்தான் நினைவில் வந்தார்கள்.

அந்தக் கொள்ளைக்காரனுக்கும் இந்த ஆறு நாள் வைத்தியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவருமே வைத்தியர் போன்று நடித்து அப்பாவிகளிடம் கொள்ளை அடிக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.