May 01, 2018

சிங்கள, தமிழ் இனவாதங்களின் இலக்கு மிகத் தெளிவானது...!!

நடப்பது இஸ்லாத்திற்கெதிரான சர்வதேச குப்ராதிக்க வர்க்கத்தின் இலங்கை வடிவம். எமது இஸ்லாமிய சிந்தனை மீதும் இஸ்லாமிய கலாச்சாரத்தின் மீதும் தாகூத்கள் குறிவைக்கிறார்கள். அரை நிர்வாண ஆடைகளை எதிர்க்காமல் பெண்களின் கண்ணியத்தை பேணும் ஆடைகள் மீது அவர்கள் தம் கோபத்தை தெரிவிப்பது ஒரு திட்டமிட்ட ஒரு பொதுச் சதியாகும். பிரான்ஸிலும் ஜேர்மனியில், அமெரிக்காவிலும் பேசிய விடயத்தை தான் பெளத்த பேரினவாதமும் பேசுகிறது. இப்போது பாடசாலையை காரணம் காட்டி திருகோணமலையில் தமிழ் சமூகமும் போராட்டம் நடத்துகிறது. அவர்கள் பாடசாலையின் நிர்வாக விதிகளை சில ஆசிரியைகளின் கணவர்கள் மீறி அதிபருடன் கடுமையாக நடந்து கொண்டதாக கூறுவதாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கும் ஒரு சமூகத்தின் கலாச்சார உடைமீது மத அடிப்படையில் விமர்சனம் செய்வது தவறான அடிப்படை. எந்த ஒரு முஸ்லிம் பாடசாலையிலும் தமிழ் சிங்கள ஆசிரியைகள் ஹபாயா அணிந்தே கற்பிக்க வேண்டுமென நாம் சட்டம் போடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சிங்கள தமிழ் சமூகங்களின் முஸ்லிம் விரோத போக்கில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இஸ்லாத்தை எதிர்க்கும் விடயத்தில் தமது முரண்பாட்டை மறந்து அல்லாஹ் வின் எதிரிகள் எல்லோரும் ஓரணியில் நிற்பார்கள் என்பதை அவர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். எம்மை பிரித்து மேயும் அவர்கள் எம்மை கருவறுக்க தமது பகை மறப்பார்கள்; என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் உள்வீட்டு பகைகளால் இன்னும் பல சிதறல்களாக சிதறிப்போகவே தயாராக இருக்கிறோம்!

எதிரிகள் எமது பெற்றோலை ஊற்றி எம்மையே எரிக்கிறார்கள்! நாம் அவனது காலைப்பிடிப்பதில் கண்ணியம் கிடைக்குமென நம்புகிறோம்! இதைவிட கைசேதம் எதுவுமில்லை. அவனோடு வரம்பு கடந்த உறவில் மோசமான நிகழ்வுகள் தவிர எதையும் காணவில்லை. ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எம்மோடு அவர்கள் கலாச்சார கலப்பை செய்ய அவர்கள் தயாராக இல்லை! நாம் அவர்களாக மாறவே அழைப்பு விடுக்கிறார்கள்! இதன் அர்த்தம் எமது அடையாளமான இஸ்லாத்தை கைவிட சொல்வது தவிர வேறில்லை.

கண்ணியம் மிக்க உலமா சமூகமே! முப்திகளே! அஷ்ஷெய்க் மார்களே! உங்கள் குறிக்கோளும் நடப்பு நிகழ்வுகளுக்கு எம்மை குற்றம் சுமத்துவதாகவே இருக்கிறது. பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றுவது தொடங்கி தன்சல் கொடுத்து பனை ஓதும் வரை உங்கள் பாசையில் சகவாழ்வு தேசப்பற்று என உங்கள் விருப்பப்படி மார்க்கத்தை அடகு வைத்தவர்களாகவே கேட்கிறோம். மூன்று தசாப்தங்களாக இந்த தேசத்தை சுடுகாடாக மாற்றிய அதியுயர் தேசப்பற்றாளர்களை பிரநிதித்துவம் செய்த சமூகம் எமது பெண்களின் ஆடையை வரையறுக்க முடிவெடுத்து திருகோணமலையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இப்போதாவது பிரச்சினையின் கோணத்தை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் எதிர்ப்பு எமது மார்க்க அடையாளம் தவிர வேறில்லை. தேசப்பற்று எமக்கு வேண்டுமா வேண்டாமா என்பது வேறுகதை. ஆனால் இந்த நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தையும், துன்பியல் வரலாற்றையும் என்றும் நாம் தொடுக்கவில்லை அந்த யுத்தத்தின் உள்ளே கூட நாம் பலாத்காரமாக இழுக்கப்பட்டோம் என்பதுதான் உண்மை. யார் இதையெல்லாம் செய்தார்களோ. அவர்களின் அரசியல் நாடகம் தொடர்கிறது.

அதற்குள் அவர்களின் அறியாத அப்பாவி சமூகமும் மீண்டும் இழுத்து வரப்படுகிறது! முஸ்லீம்களாகிய நாம் இதற்குள் பகடைக்காயாக பயன்படுத்த படுகிறோம். மீண்டும் நீங்கள் தேசப்பற்று இல்லாததால் தான் இந்த நிலை என மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் நடுவில் இனியும் முடிச்சு போடாதீர்கள்! ஏனென்றால் சிங்கள தமிழ் இனவாதங்களின் இலக்கு மிகத் தெளிவானது. அது எமது மார்க்கத்தை எம்மிடமிருந்து பறித்து வாழவிடுவது அல்லது பொது விவகாரங்களில் எமது மார்க்க அடையாளங்களை காட்டி எம்மை ஓரங்கட்டி ஒடுக்குவது. தெளிவாக இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

(மேற்படி பதிவு இனவாதத்தை மதவாதத்தை குறுந்தேசிய வாதத்தை பிரதிநிதித்துவம் செய்யாத எந்த நேர்மையான உள்ளத்தையும் குறிப்பிடுவதல்ல. நேர்வழியை பின்பற்றுவோர் மீது இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாகட்டும்.)

Roomy Abdul Azeez

7 கருத்துரைகள்:

சரியான கட்டுரை, ஜிகாதை தவிர வேறெதுவும் காபீர்களின் இந்த நோய்க்கு மருந்தாகாது.

இது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் இல்லை.

2 “எதிரிகள்” சண்டையிட்டும் போது, “துரோகிகள்” கொண்டாடுவதும் (அங்கும் இங்கும் பாடி சலுகைகள் பெறுவது), பின்னர், போர் முடிந்து அமைதி (peace) வரும் போது, இரண்டு பக்கமும் அதே துரோகிகள் மிதி வாங்குவதும் என்பது உலக நியதி.

இதற்கு காரணம் முஸ்லிம்கள் படைப்பாளனை பயப்படுவதை விடுத்து படைப்புகளுக்கு பயப்பபிடடுவது

இதற்கு காரணம் முஸ்லிம்கள் படைப்பாளனை பயப்படுவதை விடுத்து படைப்புகளுக்கு பயப்பபிடடுவது

இன நல்லினக்கம், சகவாழ்வு இதெல்லாம் ஓர் பம்மாத்து அவர்களின் தேவை முஸ்லிம்களைக் குழப்பி அதில் சூடுகாய்வது நமது இருதித் தேர்வு மறுமையாயான் இந்த பம்மாத்துக் கொல்லாம் பயப்படவேண்டியதில்லை நாம் மரணித்தால் சுவர்க்கம் (என்றாவது) அவன் மரணித்தால் நிரந்தர நரகம் நாம் ஏன் அஞ்ஞ வேண்டும்.

அருடமயான உண்மையை உரைக்கும் பதிவு எதை கூறினாலும் எங்கள் சமூகம் எப்போது கண் திறக்கப்போகின்றது.

இப்படியே பேசி பேசி உங்கள் தலை மீது நீங்களே மண்ணை வாரி கொட்டி கொள்ளுங்கள்

Post a Comment