Header Ads



ஒரு மாதத்திற்கு, பேஸ்புக் தடை

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய போலியான பயனர்களை அடையாளம் காண்பதற்காக பப்புவா நியூ கினி பேஸ்புக் சமூகதளத்திற்கு ஒரு மாத தடை விதிக்கவுள்ளது.

பயனர்கள் பதிவிடும் தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடையாளம் காணப்படும் என்று அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சர் சாம் பசில் குறிப்பிட்டுள்ளார். தமது நாடு மாற்றாக ஒரு சமூகதளத்தை உருவாக்குவது குறித்தும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

“முடக்கம் செய்யப்படும் இந்த இடைவெளியில் போலிக் கணக்கு வைத்திருப்போர், ஆபாச பதிவுகளை வெளியிடுவோர், பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்புவோர் ஆகியோரைக் கண்டுபிடிக்கவும், அப்பதிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் பயனர்களின் தரவுகள் பெறப்பட்ட கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையை அடுத்து பேஸ்புக் மீது அழுத்தங்கள் அதிகரித்திருப்பதோடு அதன் போலி செய்திகளை தடுப்பதற்கான முயற்சிகள் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பப்புவா நியூகினியில் 10 வீதமானவர்கள் மாத்திரமே இணையதள வசதிகளை பெற்றிருந்தபோதும், இணைய சேவைகளில் அந்த நாடு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. 

No comments

Powered by Blogger.