Header Ads



பிரதியமைச்சராக அலிசாகீர் மௌலானா, நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

(வீரகேசரி பத்திரிகை)

அமைச்சரவை மாற்றம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்திக்கு தீர்வை காண்பதற்காக  பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறித்தே இந்த பேச்சுவார்த்தைகள் அமைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் பிரதியமைச்ராக அலி சாகீர் மௌலானா நியமிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை மாற்றம் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. Ministers are appointed based on scientific approach. UNP Backbenches cannot change. You have another 18 months to do all changes. After that hand over the country to MR.

    ReplyDelete

Powered by Blogger.