Header Ads



இறைவனின் அற்புதமான படைப்பு


ஒரு மனிதனால் இரண்டு இரவுகள் தூங்க முடியாமல் போனால் அவன் பாதி பைத்தியக்காரனாக ஆகிவிடுவான்.

ஆனால், ஒரு பறவை ஒன்பது இரவும், பகலும் உறங்காமல் விழித்திருப்ப தோடு மட்டுமல்லாமல் அந்த ஒன்பது இரவும், பகலும் எங்குமே நிறுத்தாத தொடர் பயணமும் செய்கிறது.

"Bar-tailed godwit" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பறவையை "பட்டை மூக்கன் பறவை" என்று தமிழில் அழைக்கிறார்கள்.

இந்த பறவை அலாஸ்காவிலிருந்து நியூசிலாந்திற்கான 11,500 கிலோ மீட்டர் தூரத்தை ஒன்பது இரவுகள் மற்றும் பகல்களில் கடக்கிறது.

பயணத்தில் உணவிற்காகவோ அல்லது ஓய்விற்காகவோ எங்குமே நிற்காத இந்த பறவையின் பாதி மூளை சில மணி நேரங்கள் இயங்குவதாகவும், அந்த சமயத்தில் மற்றொரு பாதி ஓய்வு எடுப்பதாகவும் அதை ஆய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள். இப்படி மாறி, மாறி அது இயங்குவது எப்படி சாத்தியமானது என்றும் ஆய்வாளர்கள் அதிர்கிறார்களாம்.

படைப்பினங்களின் செயல் திறன் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த செயல் திறனை அந்த பறவைக்கு தந்த அந்த இறைவனின் ஆற்றல் பிரமிக்க வைக்கிறது.

எல்லாம் வல்ல இறைவன் தூய்மையானவன், அவனே நுண்ணறிவாளன்.

-Farook Sulthan-

1 comment:

  1. "வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன."
    (அல்குர்ஆன் : 16:79)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.