Header Ads



“சட்டம்ஒழுங்கு வழங்கப்பட்டிருந்தால் என்னையும், பிரதமரையும் பொன்சேகா சிறை அடைத்திருப்பார்"

அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவின் செயற்பாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆத்திரமடையச் செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 6 ஆம் திகதி சரத் பொன்சேகா, ஜனாதிபதி தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவை நேற்றைய தினம் தொடர்புகொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் போது சரத் பொன்சேகாவின் செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

“சரத் பொன்சேகா வாயை பத்திரப்படுத்திக் கொள்ளாவிட்டால் அமைச்சுப் பதவி வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும்” என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவர் மேலும், “அனைவரும் வேண்டாம் என்று கூறும் போது இந்த மனிதனுக்கு அமைச்சுப் பதவி வழங்கியதன் பலனைத் தான் அனுபவிக்க நேரிட்டுள்ளது.

குறைந்தபட்சம் இந்த மனிதருக்கு சரியாக பேசக்கூட தெரியாது. இவ்வாறான நபருக்கு வனவிலங்கு அமைச்சுதான் பொருத்தமானது.

இந்தப் பணியையேனும் சரியாக செய்வாரா என்பது நிச்சயமில்லை” என ஜனாதிபதி கடும் கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

“சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தால் என்னையும் பிரதமரையும் இந்த மனிதன் சிறையில் அடைத்திருப்பார்.

எங்கோ இருந்த ஒருவரை நாடாளுமன்றிற்கு அழைத்து வந்து அமைச்சுப் பதவி வழங்கினேன். தற்பொழுது என்னைத் தாக்க முயற்சிக்கின்றார்” என ஜனாதிபதி குறிப்பிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இது தொடர்பாக எவ்வித தகவல்களையும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவோ அல்லது ஜனாதிபதி தரப்பில் இருந்தோ எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்படி பேசியிருப்பாரேயானால் இது மாபெரும் முரண்பாடான, அநாகரிமான அதிருப்தியான வெளிப்பாடாகும். அமைச்சரவை கூட்டு பொறுப்பு என்ற வகையிலும், மனித நாகரிகம் என்ற வகையிலும் பொன்சேகா பகிரங்கமாக ஜனாதிபதியை விமர்சித்தது ஒரு பிழையான விடயம் ஆகும். ஆனால் ஜனாதிபதியின் இந்த விமர்சனம் மிகவும் திமிரான அநாகரிகமான பேச்சு ஆகும். அது என்ன ஒரு ஜனாதிபதியையும் பிரதமரையும் சிறையில் அடைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு இருக்குமானால் ஏன் இன்னும் இந்த ஞானசாராக்களும், பலசேனாக்களும் வெளியில் இருக்கிறார்கள் ஆக இந்த ஆட்சியாளர்களும் இந்த இனவாதிகளுக்கு ஒருவகையில் ஒத்துழைப்பு வழங்கிறார்கள். ஒரு சரியான அழுத்தத்தை இந்த ஆட்சிக்கு முஸ்லீம் தலைவர்கள் என்று கூறும் சுயநல அரசியல் வாதிகள் கொடுக்காமல் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை..!

    ReplyDelete
  2. President you mean to say that you and Mr. Ranil are Biggest thief of the Country. Sure you both are Thief and a Biggest Liars...

    ReplyDelete
  3. My3 has talked "Absolute True" statement that he will be in the Jail if Law & Ministry is given to Foneseka and All Srilankans would be happy if both of you are in the Jail.

    ReplyDelete

Powered by Blogger.