Header Ads



அபாயா பற்றிய சம்பந்தனின் கருத்தை நிராகரிக்கிறேன், அதற்காக கவலைப்படுகிறேன் - ஆனந்தசங்கரி

தமிழ்- முஸ்லிம் உறவை சீர்குலைப்பதனை நோக்காக கொண்ட சில சக்திகளே சில சம்பவங்களை தூண்டி விடுவதாக தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரு சமூகங்களும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

"தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இது தொடர்பில் தெரிவித்த கருத்து எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவரது கருத்து குறித்து நான் கவலையடைகிறேன். முஸ்லிம் ஆசிரியைகளும் சாரி அணிவதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வு என்று சம்பந்தன் கூறியிருப்பதானது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கே இழுக்காகும். குறைந்தபட்சம் இப்பிரச்சினை தொடர்பில் இரு சமூகத்தினரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றே அவர் கூறியிருக்க வேண்டும்" என்றும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்,  பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.நிசார், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.


2 comments:

  1. This guy Anandasangari refused to accept that LTTE’s expulsion of entire Muslim community from Jaffna was an act of Ethnic cleansing. He made a stupid statement
    that it was done for the safety of Muslims. He even took part in the token fasting protest organized by Mannar Bishop against Muslims resettling there.
    Now he is vaguely criticizing Sampamdan because his son Gary Anandasangari needs Muslim votes in Scarborough riding in Canada.

    ReplyDelete
  2. துரோகிப்பட்டத்துக்கு அஞ்சி உண்மையை மறைப்பவன் நான் அல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஆனந்த சங்கரி ஐயா அவர்கள்! எப்போதும் "ஓட்டு" அரசியலை பற்றி கவலைப்படாமல் தன் மனதில் பட்டதை வார்த்தையில் சொல்லும் ஆனந்த சங்கரி ஐயாவுக்கு என் "சல்யூட்"

    ReplyDelete

Powered by Blogger.