Header Ads



பதவி துறக்கப்போவது இல்லை - மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தாம் தொடர்ந்து பதவி வகிக்கப்போவதாக தெரிவித்துள்ள, விவசாயத்துறை அமைமைச்சர் மஹிந்த அமரவீர, கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவின், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பமும் அதுவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணி மற்றும் சுயநல அரசியல் இலாபத்துடன் செயற்படும், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களின், தனக்கு எதிரான அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் தாம் கண்டுகொள்ளப்போவது இல்லையெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"நான் எனது பதவி இராஜினாமா தொடர்பில் கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடினேன். எனினும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைந்த நாட்டுக்கான சேவை தொடரவேண்டுமெனவும், சு.கவின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்" என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும்,  ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படப்போது இல்லை எனவும், எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ், சுதந்திரக் கட்சியின் ஒருகுழுவாக செயற்படுவார்கள் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.