Header Ads



அஸ்னி அஹமட், சிங்கபூர் பயணம்.


சர்வதேச மட்ட கணித வினாவிடை  போட்டிக்காக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் இரு மொழியில் கல்வி பயிலும்  மாணவன் ஏ. ஏ. அஸ்னி அஹமட் சிங்கபூர்  பயணமாகவுள்ளார்.

அண்மையில் அக்கரைப்பற்று அல் - சிறாஜ் பாடசாலையில் தேசிய ரீதியாக நடைபெற்ற கணித வினாவிடை போட்டியில் தெரிவு செய்யப்பட்ட  இம் மாணவன் சர்வதேச ரீதியாக சிங்கபூர் நாட்டில் பல நாடுகள்  பங்கேற்கும் கணித வினாவிடை போட்டியில்  இலங்கையையும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளார். 

இம் மாணவன் இப் போட்டியில் கலந்து கொள்ள  பல வழிகளில் ஊக்கமூட்டி பல பயிற்சிகளையும் வழங்கிய கல்லூரியின் கணித பாட  இணைப்பாளர் IM. உவைஸ் , கணித பாட ஆசிரியை SF.  ரிப்னா மற்றும் வகுப்பாசிரியர் MFMR.  ஹாதிம் அவர்களுக்கும் அதிபர்,  பிரதி அதிபர்கள்,  ஆசிரியர்கள்,  தனது பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் 

இம் மாணவன்  அப்போட்டியில் வெற்றி பெற்று எமது நாட்டிற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துக்களை. இம் மாணவனுக்கு கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட்  உள்ளிட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், மற்றும்   இம் பயிற்சி அழித்த  ஆசிரியர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

(**** புகைப்படத்தில் சர்வதேச மட்ட போட்டியில் கலந்து கொள்ளும் மாணவன்  AA. அஸ்னி அஹமட்,  கல்லூரி அதிபர் எம். எஸ். முஹம்மட், கணித பாட இணைப்பாளர் IM. உவைஸ் மற்றும் ஆசிரியர்களான MFMR. ஹாதிம், ULM. முஜாஹிர் ****)

(தகவல் :- IM. உவைஸ் - கல்லூரி கணித பாட இணைப்பாளர் )

No comments

Powered by Blogger.