Header Ads



இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் - மஹிந்த சூளுரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி, சமனல விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

பெருந்திருளான மக்கள் கலந்து கொண்ட இந்த மே தின கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்றுகையில், 

இந்த நாட்டிற்கு முதலீட்டார்கள் இப்போது வருவதில்லை, மாறாக ஓடுகிறார்கள். அதற்கு காரணம் நாட்டில் நிலவும் ஸ்தீரமற்ற நிலையே எனவும் தற்போதுள்ள அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் எப்போது முடிவிற்கு வருமென்றும், அதன் பிறகு தாங்கள் நாட்டிற்கு முதலீடு செய்ய வருவதாகவும் முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

மேலும் தொடர்ந்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்துக்கொண்டிருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் என்றும் உங்கள் அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சூளுரைத்தார். 

ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்லப்படும் இலங்கையை இப்போது ´ஐக்கிய தேசிய கட்சி பொலிஸ் இராஜ்ஜியம்´ என்று தான் சொல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த நாட்டு அரசியல் ஆச்சரியமானது. உதாரணத்துக்கு, அரபு வசந்தங்கள் போன்ற புரட்சி எதுவுமின்றி, உங்களது  பதவியின் முடிவில் அல்ல, அதற்கு  இரு வருடங்களுக்கு  முன்னதாகவே நீங்கள் பதவியிலிருந்து அகற்றப்படுகிறீர்கள்.

    இப்படியான மாற்றங்களை இதர நாடுகளில் ஆயுத முனையிலும் ரத்த வெள்ளத்திலும்தான் நாம் பார்த்திருப்போம்.

    ஆனால், ஆயுதம் ஏந்தாது, அரசுக்கு விசுவாசமாக, அமைதியாக,  வாழ்ந்த ஒரு சமுதாயத்தை ஆபத்தான வேளையில் உங்கள் கடமையைச் செய்யாது கை நழுவ விட்டு விட்டீர்கள்.

    அவர்கள் அல்லாஹ்விடம் கையை ஏந்தினார்கள்.  உள்ளங்களுக்குச் சொந்தக்காரனாகிய அவன் உங்கள் உள்ளத்தில் சோதிடத்தை நம்ப வைத்து எங்களை வெல்ல வைத்தான்.

    அதே அல்லாஹ் அடுத்தவர்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அவன் அனைத்தையும் அறிந்தவன்.

    அப்பேர்ப்பட்ட ஆயுதத்தை நாம் சுமந்து கொண்டுதான் இருக்கிறோம் இன்றும்.

    நீங்கள் மீண்டும் அதே பதவிக்கு வர ஆசைப்பட்டால், நீங்கள் சேர்த்து வைத்திருக்கிறீர்களே கோடானு கோடிப் பணம், அதை தர்கா நகர்ப் பக்கம் சென்று உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோடி கோடியாய் நஷ்ட ஈடாகக் கொடுத்து உங்களுக்காகப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்.

    பாதிக்கப்பட்டோரின் பிரார்த்தனையைவிட  வலிமையானதையும், இறைவனைவிட வலிமையானவனையும் நாம் அறியமாட்டோம்!

    ReplyDelete

Powered by Blogger.