Header Ads



கண்டுபிடிப்புளுக்கான நிதி வழங்கும் ஒப்பந்திற்கு சவ்பாத் இப்னு மஜீட் தெரிவு

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் சிறந்த  கண்டுபிடிப்புளுக்கான நிதி வழங்கும் ஒப்பந்திற்கு சாய்ந்தமருதை சேர்ந்த சவ்பாத் இப்னு மஜீட் தெரிவு 

மில்லியன் ரூபாய் இற்கு மேற்பட்ட நிதிகளை வழங்கும் Invent Grand Scheme - 2017 எனும் நிகழ்ச்சியில் இளம் கண்டுபிடிப்பாளர் முஹம்மட் சவ்பாத் தெரிவு இவர் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது  எனும் ஊரில் ஜீ. எம். எம். எஸ் வீதியில் வசிக்கும் வியாபாரியான அப்துல் மஜீட் மற்றும் பௌசியா ஆகியோரின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது 

விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் 1973 வருட 53 ஆம்  இலக்க  இலங்கை புத்தாக்குனர்களின் செயற்திட்ட வர்த்தமானிக்கு இணங்க வருடாந்தம் புத்தாக்குனர்களுக்கான நிதி வழங்கும் 
" Invent Grand Scheme - 2017 Programme " எனும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் இச் செயற்திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதி விஷேட கண்டுபிடிப்புக்கான   நிதியை வழங்குகிறது.

அந்த வகையில்  2017 டிசம்பர் மாதம் தேசிய  ரீதியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதில் விண்ணப்பித்த  அனைவர்களதும் புத்தாக்கம் மற்றும்  ஆக்கவுரிமை பத்திரம் பரிசீலனை செய்யப்பட்டு பயனுள்ள மற்றும் மக்களுக்கு  இலகுவாக கொள்வனவு செய்யக் கூடிய கண்டுபிடிப்புகள் தெரிவு செய்யப்பட்டது

தெரிவு செய்யப்பட்ட விண்ணபதாரர்களின் புத்தாக்கங்களை பரிசீலனை செய்து நிதி வழங்கும்  ஒப்பந்தமானது 2018 மே மாதம் 25 ( வெள்ளிக்கிழமை ) அன்று  இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழுவில்  இடம்பெற்றது. இந் நிகழ்வில் நிதி வழங்கும் ஒப்பந்திற்கு பொருத்தமானதை தெரிவுக் உட்படுத்த அவ் நிகழ்வில்  இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழுவின் பிரதி  ஆணையாளர்கள் ( திரு : எம். ஆர்.  கிரியல்ல, திருமதி. எம். எஸ்.  கல்பனி ராஜபக்ஸ)  மற்றும்  ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ( திரு. எஸ். டீ.  சிந்தக )  என பலரும் கலந்து கொண்டு நிதி வழங்கும் ஒப்பந்திற்கு தெரிவு செய்ய நேர்முகத் தேர்வுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் அடுத்த அடுத்த கட்டமான காசோலை வழங்கும் நிகழ்வும் விரைவில் இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

நாட்டின் உயிர் நாடிகள் என கருதி புத்தாக்குனர் நிதி முறைமை இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.... இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு நாட்டின் வளர்ச்சியிலும் விஞ்ஞானிகள் நாட்டில்  உருவாகுவதற்கும் பல்வேறு பங்களிப்பை செய்து வருகின்றது.

குறிப்பு :
முஹம்மட் சவ்பாத் தனது நன்றி கூறுகிறார் முதலில்  இறைவனுக்கு அடுத்து நன்றி பூக்களை  இச் சாதனை பயணத்தில் பயணிக்க உதவிய தனது பெற்றோருக்கும்  , சகோதரர்களுக்கு, குடும்பத்தவர்கள், பாடசாலை காலத்தில்  ஊக்கமூட்டிய அதிபர்கள்  ஆசிரியர்கள்  ( ஏ. ஆதம்பாவா sir , MI. அஸ்ஹர்  sir) , நண்பர்கள், வெளி சமூக மற்றும் விளையாட்டு அமைப்புகள் , அரச, தனியார் நிறுவனங்கள் ,தனியார் கல்வி நிறுவனங்கள், தனி நபர்கள், பல்வேறு ஊடகங்கள் ,  ஊடகவியலாளர்கள் , வர்த்தக நிறுவனங்கள், என இன்னும் பலருக்கு தனது  மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தகவல் : AA.  Aaroos  (அம்பாறை மாவட்ட இளம் கண்டுபிடிப்பாளர் ஒன்றியம் )


1 comment:

Powered by Blogger.