May 18, 2018

யூதர்­ - பலஸ்­தீன மோதல்­க­ளுக்கு பிரித்­தா­னி­யாவே பொறுப்­பு - வஸந்த சேன­நா­யக்க

யூதர்­க­ளுக்கும் பலஸ்­தீன  மக்­க­ளுக்கும் இடையே மூண்­டுள்ள  மோதல்­க­ளுக்கு முத­லா­வ­தாக  பிரித்­தா­னி­யாவே பொறுப்­புக்­கூறக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றது. மேலும் யூதர்­களால் பலஸ்­தீ­னர்­க­ளுக்­கெ­தி­ராக இழைக்­கப்­பட்­டு­வரும் அநி­யா­யங்­களின்  முழுப்­பொ­றுப்­பையும் பிரித்­தா­னி­யாவே ஏற்க வேண்டும் என்று வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் வஸந்த சேன­நா­யக்க கூறினார்.

பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கை  அமைப்பும் கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன  தூத­ர­கமும் இணைந்து  ஒழுங்குசெய்த பலஸ்­தீன மக்­களின் வெளி­யேற்­றத்தை நினைவு  கூரும் 70 ஆவது நக்பா தினம் தொடர்­பான நிகழ்வு கொழும்­பி­லுள்ள சர்­வ­தேச கற்­கைக்­கான லக் ஷ்மன்  கதிர்­காமர் நிலை­யத்தில் கடந்த வாரம் இடம் பெற்­ற­போது அதில் தலை­மை­ தாங்கி உரை­யாற்றும் போதே  இரா­ஜாங்க அமைச்சர்  வஸந்த சேனநா­யக்க  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

1948 ஆம் ஆண்டு  பலஸ்­தீன நாட்டை  இரண்­டாக உடைத்து அங்கு இஸ்ரேல் என்ற ஒரு நாடு தோற்­று­விக்­கப்­பட்­டது. இதனால்  அங்கு பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த 7 இலட்சம்  மக்கள் ஜோர்தான், சிரியா, எகிப்து போன்ற நாடு­களில் தஞ்­ச­ம­டைந்­தனர். இந்த சோக நிகழ்வை நினைவு  கூரு­மு­க­மா­கவே ‘நக்பா’ தினம் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கி­றது.

கொழும்பில் நடை­பெற்ற மேற்­படி 70 ஆவது வருட நக்பா தின நிகழ்வில் இரா­ஜாங்க அமைச்சர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இஸ்ரேல், பலஸ்­தீன பிரச்­சினை உலகில் இடம்­பெற்று வரும்  மிகவும் பழைமை  வாய்ந்த போராட்­டங்­களில் ஒன்­றாகும்.  பலஸ்­தீன நாட்டை இரண்­டாகப் பிரித்து  அங்கு இஸ்ரேல் நாட்டை உரு­வாக்­கி­யுள்­ளனர். அங்கு பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்த பலஸ்­தீன  மக்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர்.

அன்று இலங்கை அந்­நி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருந்­தது போலவே  அப்­போது பலஸ்­தீன  நாடும் அந்­நியர் பிடி­யிலே இருந்­தது. இத்­த­கைய சந்­தர்ப்­பத்­திலேதான் பிரித்­தா­னியா  யூத ராஜ்­ஜி­யத்தை  அங்கு நிறுவ வழி­வ­குத்­தது. இதன் விளைவாக யூதர்­க­ளுக்கும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கும் இடையே நிகழும் மோதல்­க­ளுக்கு பிரித்­தா­னி­யாவே முழுப்­பொ­றுப்­பையும் ஏற்­க­வேண்டும். அய­ல­வர்கள் இரு­வ­ரையும்  மோத­விடும் அசிங்­கமே  பிரித்­தா­னி­யாவால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது என்றார்.

இவ்­வை­ப­வத்தில்  மக்கள் விடு­தலை  முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,  இலங்கை – பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்குழு இணைத்தலைவரும் தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான  இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்,  இலங்கைக்கான  பலஸ்தீன தூதுவர் சுஹைர் செய்த் உட்பட  பல பிரமுகர்களும் உரையாற்றினர்.
-Vidivelli

2 கருத்துரைகள்:

வாழ வந்தவர்கள் ஆள வந்தவர்களாகி வந்த காரியம் கைகூடாது ஓட வேண்டிய நிலையில்  தீர்க்காது விட்டுச் சென்ற சிக்கல்களே  பலஸ்தீன், காஷ்மீர், ஸ்ரீ லங்கா போன்றன. 

ஆம், பாலஸ்தீனர்களுக்கும் அதன்  ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தூர இருந்தாவது  ஆயுதம் விற்றுப் பிழைப்போம் என்ற அசிங்கத்தையே பிரிட்டிஷார் அரங்கேற்றி உள்ளனர்.

இவற்றைத்  தீர்த்து வைக்கும் தார்மீகப் பொறுப்பு ஏனையோரைவிட அவர்களுக்கு உள்ளது;  அது அவர்களின் முன்னோர்களின் பாவங்களுக்கு பரிகாரமாகலாம்.

இவ்வளவு அப்பட்டமான அனியாயம் இங்கு கமன்ட்செய்து விளயாடிவரும் காழ்ப்புவாதிகளுக்கு தெரியாமலா உள்ளது???

Post a Comment