Header Ads



ஐக்கிய இராட்சியத்தில் மாபெரும் சிறுவர் போட்டி நிகழ்ற்சியும், பரிசளிப்பு விழாவும் (படங்கள்)


National Children Competition (NCC ) இவ்வருடம் 9வது  முறையாகவும் ஐக்கிய இராட்சியத்தில் இறைவன் அருளால்(29/04/2918) நடைபெற்று முடிந்தது 

 ("BUILDING CONFIDENCE IN GROWING CHILDREN") ''வளரும் இளம் சமுதாயத்தில் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல் ''  எனும் மையக்கருத்தை அடைவாகக் கொண்டு தேசிய ரீதியில் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இப்போட்டி நிகழ்ச்சிகளுக்காக 4-14 வயதிட்குற்பட்ட அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் உள்வாங்கப்படுகின்றனர்.
 மிக சிறிய எண்ணிக்கையைக் கொண்ட போட்டியாளர்களையும்,சில போட்டி நிகழ்ச்சிகளையும் மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வானது இன்று 8 வருடங்களைக் கடந்து 9வது ருடமாக இவ்வருடம் 2018ம்  ஆண்டு தேசிய ரீதியில்  சுமார் 750 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களது திறமையகளை வெளிக்காட்டினர்.

கட்டுரை,கவிதை,பேச்சு,கிரா'அத்,துஆ, தப்ஸீருல் குர்'ஆன் CALLIGRAPHY, TV BROADCASTING, POETRY, NEWS REPORTING, போன்ற போட்டி நிகழ்ச்சிகளுக்காக உள்வாங்கப்படும் மாணவ மாணவிகள் வயதடிப்படையில் குழுக்களாக வகுக்கப்பட்டு  நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இது தவிர்ந்து 6 வயதிற்கு கீழ்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்கும் முகமாக ''SUPER HEROES'' எனும் தலைப்பில் அவர்கள் விரும்பிய நிகழ்ச்சிகளை மேடையேற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இதுபோன்று மாணவர்களிடத்தில் காணப்படும் பிரத்தியேகமான திறன்களை வெளிப்படுத்துவதற்காக  ''YOUNG MUSLIM TALENT''(YMT ) என்றொரு நிகழ்வும் காணப்படுகின்றது.
 மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை இனங்கண்டுக் கொள்ளவும் அதனை உரிய முறையில் வளர்த்துக் கொண்டு மேடையேற்ற அல்லது முன்வைக்கக் கூடியளவு தங்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சி ஏற்பாட்டின் பிரதான நோக்கமாகும். அல்லாஹ்வின் அருளால் இன் நோக்கத்தினை நாம் அடைந்து கொண்டு வருகின்றோம் என்பதனை கண்கூடாகக் காண முடிகின்றது.அதேநேரம் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டு ஊக்குவிக்கவும் இந்நிகழ்வு காரணமாக அமைகின்றது.

 நாளைய சமூகத் தலைவர்கள், தன்னம்பிக்கையும்,சிறந்த ஆளுமை உடையவர்களாகவும் உருவாக வேண்டும் எனும் நோக்கில் தங்கள் நேரத்தாலும், பொருளாலும், உழைப்பாலும் உதவி செய்து ஒத்துழைத்துக்கொண்டிருக்கும் ஊழியர்கள்,நலன்விரும்பிகள் ,மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ,NCC ன் ஏற்பாட்டுக் குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு எமது முயற்சிகளை அல்லாஹ் அங்கீகரித்து இலக்கை அடைந்து கொள்ளக்கூடிய பாக்கியத்தையும் அருள்வானாக!    
- நசீர் ஸுபைர்-





No comments

Powered by Blogger.