Header Ads



அமெரிக்கப் பிரஜையென்பதால், கோ​ட்டாவை கைதுசெய்ய முடியாது - ராஜித

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, இலங்கையில் கைதுசெய்ய முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளதால், இலங்கைச் சட்டத்தின் பிரகாரம், அவரைக் கைது செய்ய முடியாதென்றும் கூறினார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்‌ஷவை, இலங்கையில் கைதுசெய்ய முடியாமைக்கான காரணம் குறித்து தமக்குத் தெரியாதெனவும் இதனைத் தாம் கேட்கின்ற போது, தன்னை ஏசுவதாகவும் குறிப்பிட்டார்.   

கோட்டாபய செய்த தவறுகளை, தாம் இந்த அரசாங்கத்தில் இருந்துகொண்டு சுட்டிக்காட்டவில்லை எனவும், கடந்த அரசாங்கத்தில் இருக்கும் போதே இதனைத் தெரிவித்ததாகவும், அவர் குறிப்பிட்டார்.  அத்துடன், கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்கள் மேற்கொண்ட தவறுகளை, நிமிர்ந்து நின்று தட்டிக்கேட்ட நபர், தானென்றும் அமைச்சர் ராஜித கூறினார்.   

இதன்போது, “பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைதுசெய்ய, ஏன் அரசாங்கத்துக்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது?” என, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.  இதற்குப் பதிலளித்த அமைச்சர், “கடந்த அரசாங்கத்தில் குற்றமிழைத்தவர்களைக் கைதுசெய்ய, காலதாமதம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், சில நாட்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், தற்போது அவ்வாறில்லை.

“எவருக்கும் பிணை இலகுவில் வழங்கப்படுவதில்லை. மகேந்திரனைக் கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கமைய அவர் கைது செய்யப்படுவார்” என்றார்.   

“ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைக் கைதுசெய்ய, சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டு 2 வருடங்கள் கடந்தும், அவரைக் கைதுசெய்ய முடியாதுள்ளது. ஆனால், மகேந்திரன் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை நினைவில் கொள்ளுங்கள். ஏன், அன்று உதயங்க குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஊடகவியலாளர்களுக்கு தோன்றவில்லையா?” கோபத்துடன் வினவினார்.  

5 comments:

  1. அப்ப பாகிஸ்தான் பிரஜைகளுக்கு மரண தண்டனை எல்லாம் வழங்குகிறீர்களே

    ReplyDelete
  2. பொய்யையும் புரட்டையும் அள்ளிவார்த்து எவ்வளவுகாலம் இந்த நாட்டுமக்களை ஏமாற்ற இந்த கோமாளிகளுக்கு முடியும். இந்தநாடு ஒரு கோமாளிகளின் சுவர்க்கம் என்றால் மிகையாகாது. எந்தப் பாரதூரமான குற்றத்தை இழைத்தாலும் குற்றவாளி அமெரிக்கனாக இருந்தால் அவருடைய செயல்களுக்கு இந்த நாட்டுச்சட்டம் அல்லது சர்வதேச சட்டம் செல்லுபடியாகாது. கோமாளிக்கூத்து.

    ReplyDelete
  3. அடீ முட்டால்கள்.மேலே பாக்கிஸ்தான் பிறஜைக்கு இலங்கையில் மரணதன்டணை கீலே கோட்டாவை கைது செய்யமுடியாது அமெரிக்க. பிரஜை

    ReplyDelete

Powered by Blogger.