May 12, 2018

இவை வெறும் கதையல்ல, சமூகத்தில் நடக்கும் நிஜங்களே...!

-ஸெய்னா  பின்த் முஹம்மது ஹாரிஸ்-

அல்­லா­ஹுத்­த­ஆலா பூமியில் எத்­த­னை­யோ­ கோடிப் படைப்­பு­களை படைத்­தி­ருக்­கின்றான். ஒவ்­வொரு  படைப்­பிலும்  தனிச் சிறப்­பையும்  கொட்­டிக்­­கி­டக்கும்  அழ­கையும்  அள்ளிச்  சொறிந்­தி­ருக்­கிறான்.  அத்­த­கைய  அற்­பு­தப்­ப­டைப்­பு­களில் ஒன்­றுதான்  மனித இனம். உல­கிலே ஆற­றி­வுடன்  படைக்­கப்­பட்ட ஒரே இனம் மனித இனம். ஆணாலும் பெண்­ணாலும் உரு­வான மனித இனத்தில்  ஆண், பெண்­ணுக்கு ஆடை­யா­கவும்  பெண், ஆணுக்கு ஆடை­யா­கவும் இருப்­ப­துதான் இறை­நி­யதி.

 “அவர்கள் உங்­க­ளுக்கு ஆடை­யா­கவும்  நீங்கள்  அவர்­க­ளுக்கு  ஆடை­யா­கவும் இருக்­கின்­றீர்கள்” (2: 187)

 ஒரு கண­வ­னுக்கு  அவன் மனைவி  ஆடை­யாக  இருப்­ப­தனை இஸ்லாம்  வலி­யு­றுத்­து­கின்ற  அதே­வேளை, தனக்கு  மஹ்றம்  அல்­லாத  ஆண்­க­ளி­டத்தில்  ஒரு போதும்  ஒரு பெண்  சாதா­ர­ண­மாக  நடந்­து­கொள்ள  முடி­யாது  எனவும்  எச்­ச­ரிக்கை  செய்­துள்­ளது. அவர்­க­ளோடு  பேசும்  போதோ,  பழ­கும்­போதோ  ‘ஹிஜாப்’ எனும்  ஆயு­தத்தைப் பேண  இஸ்லாம்  வலி­யு­றுத்­து­கின்­றது.

 ‘ஹிஜாப்’ என்ற சொல்  ‘ஹஜப’ என்ற  மூலச் சொல்­லி­லி­ருந்து  உரு­வா­ன­தாகும்.  ‘ஹஜப’ என்றால்  ஒன்றை  மறைத்தான்  எனப்­பொ­ருள்­ப­டு­கி­றது.  அதே­வேளை  ‘ஹிஜாப்’ என்ற   சொல்­லிற்கு  எதனைக்  கொண்டு  ஒரு பொருள் முற்று முழு­தாக மறைக்­கப்­ப­டுமோ  அந்த  ஒன்­றிற்குச்  சொல்­லப்­படும்.  இஸ்­லா­மிய வழக்கில் ஒரு  பெண் அவ­ளது  உடலில்  அவள்  மறைக்க வேண்­டிய  பகு­திகள்  என வலி­யு­றுத்­தப்­பட்ட  இடங்­களை  மறைக்­கக்­கூ­டிய ஆடை­யையே நாம் ஹிஜாப் என்­கிறோம்.

  அல்­குர்ஆன்  வச­னங்கள்  மற்றும்  ஹதீஸ்­களின்  அடிப்­ப­டையில்  ஹிஜா­பா­னது எவ்­வா­றா­ன­தாக இருக்க வேண்டும்  என்­பது தொடர்­பாக அறி­ஞர்கள்  சில வரை­ய­றை­களை  வகுத்­துள்­ளார்கள்.

1.  ஹிஜா­பா­னது  உடலை  முழு­மை­யாக மறைப்­ப­தாக  இருத்தல்  வேண்டும்.  அது­வா­னது  பெண்­க­ளது  இயல்­பான அழ­கையும்  அலங்­கா­ரத்­தையும்  வெளிக்­காட்­டு­வ­தாக  இருத்தல் கூடாது. ஆனால்  முகம் மற்றும்  இரு  முன்­னம்­கைகள்  ஆகிய  உடலில்  இருந்து  தானாக வெளியில்  தெரி­யும்­ப­டி­யாக  உள்ள  உறுப்­புகள்  வெளிக்­காட்­டப்­ப­டு­வதில்  குற்­ற­மில்லை.

“அதி­னின்று  வெளியில் தெரியக் கூடி­ய­வை­களைத்  தவிர தங்கள்  அலங்­கா­ரத்தை  அவர்கள்  வெளிப்­ப­டுத்த  வேண்டாம்.  தங்கள்  முந்­தா­னை­களை  தம் மேல் சட்­டை­களின்  மீது  போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகி­ய­வற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்……… ”      (சூறா அந்நூர்: 31)
இப்னு  அப்பாஸ் (ரழி) மற்றும்  இப்னு மஸ்ஊத் (ரழி) போன்றோர் இவ்­வ­ச­னத்தில் வந்­துள்ள “இல்லா மா ழஹர மின்ஹா” அதி­னின்று வெளியில் தெரி­யக்­கூ­டி­ய­வை­களைத் தவிர  என்ற  அல்­லாஹ்வின்  கூற்­றிற்கு  விளக்­க­ம­ளிக்­கையில்  அது முகம், இரண்டு  முன்னம்  கைகளும் என்றே விளக்கம்  தரு­கி­றார்கள். மேலும்  சில  இடங்­களில்  இப்னு  மஸ்ஊத் (ரழி) அவர்கள்  ஒரு பெண்ணின்  மேலா­டை­யைத்தான் வெளியில் தெரியும் அழகு என அல்லாஹ்  குறிப்­பி­டுவதாகவும் தெரி­விக்­கி­றார்கள். அல்­லாஹ்வே  மிக ­அ­றிந்­தவன்.

2. ஹிஜா­பா­னது  மெல்­லி­ய­தாக  அன்றி  தடிப்­பா­ன­தாக  இருத்தல் வேண்டும்.

தனது உடலின் நிறத்­தைக்­கூட  காட்டும் அளவு  ஆடை அணிந்து  பிறர்  பார்க்­கும்­ப­டி­யாகச்  செல்­வது  என்­பது  நிர்­வா­ண­மாகச்  செல்­வ­தற்கு சமமே.

 நபி (ஸல்) அவர்கள்  கூறி­ய­தாக  அபூ ஹுரைரா  (ரழி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்:

“இரண்டு  கூட்­டத்­தினர் நர­க­வா­சி­க­ளாவர். அவர்­களை  நான் பார்க்­க­வில்லை. (பிற்­கா­லத்தில் வரு­வார்கள்)

(1) ஒரு கூட்­டத்­தி­ன­ரிடம்  பசு மாட்டின் வால்கள் போல்   சாட்­டைகள்  இருக்கும். அதன் மூலம்  மக்­களை  அடித்து  துன்­பு­றுத்­து­வார்கள். 

(2) ஆடைகள்  திறந்து  (அரை­குறை) நிர்­வா­ண­மாக  உள்ள பெண்கள்.  இவர்கள் பிறரைக்  கவர்ந்­தி­ழுப்பர். பிற­ரிடம்  சாய்வர்.  அவர்­களின்  கூந்தல் ஒட்­ட­கத்தின்  சாய்ந்த  திமில்கள் போல இருக்கும்.

இவர்கள்  சுவர்க்­கத்தில்  நுழைய மாட்­டார்கள். அதன்  வாடையைக்கூட  நுக­ர­மாட்­டார்கள். அதன் வாடை  இன்ன  தூரத்­தி­லி­ருந்தும் பெற்­றுக்­கொள்­ளப்­படும்.  (ஆனால் அவர்கள் அந்த  வாடையை  நுக­ர­மாட்­டார்கள்)”  ஆதாரம்: முஸ்லிம்

3. ஹிஜா­பா­னது தன்­னிலே  அலங்­கா­ர­மா­ன­தாக  இருத்தல்  கூடாது.

சூறா நூர்: 31 இல் அல்லாஹ்  கையா­ளக்­கூ­டிய  ‘ஹிமார்’ என்ற  சொல்லின்  கருத்தை  தப்ஸீர் ஆசி­ரி­யர்கள்  விளக்கும்போது  அவர்­களில்  பெரும்­பா­லானோர்  பின்­வரும்  கருத்­தையே கொண்­டுள்­ளனர்.  ‘ஹிமார்’ என்­பது   ஒரு பெண் தன் தலை­யையும்  தன் கழுத்­தையும்  மறைக்க  பயன்­ப­டுத்தும்  ஆடை.  மேலும்  ‘ஜைப்’  என்­பது கழுத்து மற்றும் நெஞ்சை மறைத்தல்  என்ற  கருத்தில்  ஆளப்­பட்­டுள்­ளது.
 மேலும்,  எவள் ஒருவள்  தனது  தலையை  சிறி­த­ள­வாக  மறைத்து  கழுத்­தையோ  நெஞ்­சையோ மறைக்­க­வில்­லையோ  அல்­லது  அழ­கிற்­காக  வேண்டி  தனது  காது­களைத் தெரி­ய­வி­டு­கின்­றாளோ  அவள்  அல்­லாஹ்­வு­டைய  வச­னத்­திற்கு  மாறு செய்­து­விட்டாள்.

“நபியே, உம்­மு­டைய  மனை­வி­ய­ருக்கும்,  உம்­மு­டைய  புதல்­வி­ய­ருக்கும்  விசு­வா­சி­க­ளான  பெண்­க­ளுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்­தா­னை­களை தாழ்த்திக் கொள்­ளு­மாறு  நீர் கூறு­வீ­ராக” (அல் அஹ்ஸாப்: 59)

 இந்த வச­னத்தில் கையா­ளப்­பட்­டுள்ள “ஜலாபிப்” என்ற  சொல்­லா­னது  “ஜில்பாப்” என்ற சொல்லின் பன்மை  வடி­வ­மாகும்.  ஜில்பாப் என்­பது  “உடலில்  தலையின்  உச்­சி­யி­லி­ருந்து  பாதம்­வரை  மறைக்­கக்­கூ­டிய  விசா­ல­மான  உட­லோடு ஒட்­டாத  ஆடை­யாகும்.”

4. மணம் பூசப்­பட்­ட­தாக  ஹிஜாப் இருத்தல் கூடாது.

நபி (ஸல்) அவர்கள்  கூறி­னார்கள் “ எந்­த­வொரு  பெண் மணம்  பூசி  அதன்  வாச­னையை  ஏனையோர்  நுகர  வேண்டுமென்ற  நோக்­கத்­துடன்  ஒரு கூட்­டத்தை  கடந்து  செல்­கி­றாளோ அவள்  ஒரு  விப­சாரி ஆவாள்” ஆதாரம்: அபூ­தாவுத்

5. ஒடுக்­க­மா­ன­தாக  அல்­லாமல்  விரி­வா­ன­தாக  இருத்தல் வேண்டும்.

உடலின்  அளவை  பூர­ண­மாக  அள­வெ­டுத்துக் காட்­டக்­கூ­டிய தனது உள்­ளா­டை­கள்­கூட வெளியில் தெரியும் அள­விற்கு  ஒரு பெண்  ஆடை அணி­வ­தா­னது  ஏனைய  அன்­னிய  ஆண்­களை  அவள்பால்  திசை திருப்­பவும், ஆசை­கொள்ள வைக்­கவும், மோகம் கொள்ளவும்  வைக்­கி­றது. இவர்கள்தான் ஆடை­ய­ணிந்தும்  நிர்­வா­ணி­க­ளான “காஸி­யாதுன் ஆரியாத்” என நபி­ய­வர்கள்  குறிப்­பிட்ட பெண்­க­ளாவார். இத்­த­கை­யோ­ருக்கு  நர­கத்தைத் தவிர  வேறு புக­லிடம் கிடைக்­கப்­போ­வது  இல்லை.

6. ஆண்­களின்  ஆடைக்கு  ஒப்­பா­ன­தாக  ஹிஜாப் இருத்தல் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் பெண்­களின்  ஆடை­களை  அணியும்  ஆண்­க­ளையும், ஆண்­களின் ஆடை­களை  அணியும்  பெண்­க­ளையும்  சபித்­தார்கள். ஆதாரம்: ஸஹீஹ்  ஜாமிஉல் அல்­பானி

7. ஹிஜா­பா­னது  காபி­ரான  பெண்ணின்  ஆடைக்கு ஒப்­பா­ன­தாக  இருத்தல் கூடாது.
நபி (ஸல்) அவர்கள்  கூறி­னார்கள் “யார் ஒருவர்  ஒரு சமூ­கத்­திற்கு  ஒப்­பா­கின்­றாரோ, அவர்  அவர்­களை  சார்ந்­த­வரே”

8. கவர்ச்­சி­யா­ன­தாக  இருத்தல் கூடாது.

ஏனைய ஆண்கள்  தன்னைப்  பார்க்க வேண்டும் என்­ப­தற்­காக  பெரு­மைத்­த­ன­மான  கவர்ச்­சி­யான  ஆடை­களை  அணிந்து கொண்டு  உலா வரக்­கூ­டாது.

 இவ்­வா­றாக ஒரு பெண்ணின்  ஹிஜாப் வரை­யறை  செய்­யப்­பட்­டி­ருக்கும்  வேளை,  தற்­கா­லத்து  முஸ்லிம்  பெண்­களின்  ஹிஜா­பா­னது  எந்­த­ளவு  தூரம்  மேற்­கூ­றப்­பட்ட  நிபந்­த­னை­களைப்  பேணி  இருக்­கின்­றது  என்­ப­தனை  கருத்தில் கொள்­வது  முஸ்­லி­மான  இந்த  உம்­மத்தை  நரகை  விட்டும் காப்­பாற்­ற­வேண்டும்  என  நேசிக்­கக்­கூ­டிய  ஒவ்­வொரு  பொறுப்­புள்ள  நபரின் மீதும்  கட்­டாயக் கட­மை­யாகும்.

  உடலை மறைத்து,  அலங்­கா­ரத்தை  வெளிக்­காட்­டாது, ஒடுக்­க­மா­ன­தாக  அன்றி  விசா­ல­மா­ன­தாக  இருக்­கத்­தகு  நிலையில் ஏனை­யோரின்  பார்­வையில்  கண்­ணி­யத்திற் குரிய  ஆடை­யாக  அப்­போது (?) பார்க்­கப்­பட்ட  ஒரு முஸ்லிம்  பெண்ணின்  தனித்­து­வ­மான  ஆடைதான்  அபா­யா­வாகும்.  என்  அழகை  யாரும்  பார்த்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக  உரு­வாக்­கப்­பட்ட  அபாயா  இன்றோ “என்­னைப்பார் என்  அழ­கைப்பார்” என்று   விளம்­ப­ரப்­ப­டுத்தும் அள­விற்கு  பெஷ­னாகிப் போய்­விட்­டது. ‘ஜில்பாப்’ என்ற  அபாயா வகையில்  இருந்து ‘அல்பாப்’  என்ற  கருத்தே  இல்­லாத  ஒரு  ஆடை வகைக்கு  இக்­கா­லத்து பெஷன் அபா­யாக்கள்  தள்­ளப்­பட்­டு­விட்­டன. Coat Abaya, Half – Flared Abaya, Full–Flared Abaya, Butterfly Abaya, Sari Abaya, Wedding Abaya, Dubai Abaya ,Box Model Abaya, Turkey Abaya  என  அபா­யாக்கள்  பல­வி­த­மாக  இன்று  சமூ­கத்தில்  வைர­லாக  பர­வி­வ­ரு­கின்­றன.

  தான் வாங்­கு­கின்ற அல்­லது  அணி­கின்ற அபாயா தன்  அழகை  பிறர் பார்­வை­யி­லி­ருந்து  மறைக்க வேண்டும். இஸ்­லாத்தின்  வரை­ய­றைக்குள்  அது பேணப்­ப­ட­வேண்டும்.  மற்­றை­ய­வர்கள் என்னை  கண்­ணி­ய­மாகப்  பார்க்க வேண்டும்  என்ற  நிலை  தற்­கா­லத்துப்  பெண்­களின்  மனங்­களிலிருந்து வெகு­தூரம் சென்று விட்­டது. மாறாக  நான்  போடு­கின்ற  அபாயா  இன்­ன­வ­ரது  அபா­யாவை  விட பெறு­ம­தி­யா­ன­தாக  இருக்­கி­றதா?  அசத்­த­லாக இருக்­கி­றதா?  கவர்ச்­சி­யாக  இருக்­கி­றதா?  High fi ஆக  இருக்­கி­றதா? என்­ப­தனைக்  கவ­னத்தில்  கொள்­வ­தில்தான்  எமது  நவீன  முஸ்லிம் பெண்கள்  அதிகம் சிரத்தை  எடுக்­கின்­றனர்.  உடலை  மறைக்க  வேண்­டிய  ஹிஜாபே  இன்று  உடலின்  மொத்­தப்­ப­கு­தி­யையும்  படம்  எடுத்­துக்­காட்­டு­கின்ற  ஏனைய பெண்­களே  தங்­க­ளது  கண்­களை  மூடிக் கொள்­கின்ற  அள­விற்கு  மிகவும்  பரி­தாப நிலைக்குத்  தள்­ளப்­பட்­டி­ருப்­பது, எங்கே  அல்­லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள்  கூறிய  அந்த  சுவ­னத்தின்  வாடையைக் கூட  நுகர முடி­யாத  அள­விற்கு  எமது  முஸ்லிம் பெண்கள்  தள்­ளப்­பட்டு விட்­ட­னரோ?  என எண்­ணத்­தோன்று­கின்­றது.
 அபா­யாக்­களின்  நிலைதான்  இவ்­வாறு பரி­தா­பத்­திற்கு உரி­ய­தாக  மாறி­விட்­டது  என்றால்  இன்று தலையை  மாத்­திரம்  மறைத்தால்  போதும்  என்று வாதிடும்  ஹிஜாப்  வாதி­களின்  ஹிஜாபோ  பெஷனின்  உச்­சத்தில்   கொடி­கட்டிப் பறக்­கி­றது. கைக்­குட்டை  அளவு,  பல­வா­றான அலங்­கா­ரங்­களால் அலங்­க­ரிக்­கப்­பட்ட  ஒரு துண்டு துண்­டினால்  நெஞ்­சி­னையோ கழுத்­தி­னையோ  முதுகின் பெரும் பகு­தி­யையோ  மறைக்­காமல்  வெறு­மனே  தலையை  மாத்­திரம்  மறைத்துச்  செல்­வ­துதான் தற்­கா­லத்து  Fashion  ஹிஜாபா? இத்­த­கைய  ஆடை­களை  அணிவோர்  நிச்­சயம்  அல்­லாஹ்வைப் பயந்துகொள்­ள­வேண்டும்.

  தற்­கா­லத்­திற்கு ஏற்ப உலகின்  ஒவ்­வொரு  விட­யமும்  மாறு­கின்­ற­போது  இஸ்­லாத்தின்  கூறு­களும்  மாற­வேண்டும் என புகார் கூறும் நவீன  இஸ்­லா­மிய வாதிகள் ஹிஜா­பையும்  விட்­டு­வி­ட­வில்லை. முஸ்லிம் பெண்­களின்  ஹிஜாப்  Fashion  இல்லை எனக்­கூறி  சதி வலைக்குள்  சிக்­க­வைத்து, ஆடைக்­கு­றைப்பு  கலா­சா­ரத்­தினுள்  முஸ்லிம்  பெண்­களை மூழ்­க­வைத்து அப்­பெண்­களை கண்­ணி­ய­மி­ழக்கச்  செய்­து­விட்­டனர். கணவ மட்­டுமே  ரசிக்க  வேண்­டிய தன் ­அ­ழகை, ஏனைய  ஆண்கள்  விலை பேசா­ம­லேயே  ரசிக்க  அனு­மதி  கொடுத்து விட்டாள்  தற்­கா­லத்து முஸ்லிம் பெண். இத்­த­கைய பெண் அல்­லாஹ்வின்  கோபத்­தையும், ரஸூல் (ஸல்) அவர்­களின்  சாபத்­தையும்  நிச்­சயம்  எதிர்­கொள்ள  வேண்டி வரும்.

ஆடை­யின்றி   இருந்த மனிதன் படிப்­ப­டி­யாக  தன்  உடல் முழு­வ­த­னையும்  மறைக்­கின்ற ஆடையை  இறு­தியில்  பெறு­வ­துதான் நாக­ரிக  வளர்ச்சி. ஆனால் இன்று  பெஷன்  என்ற பெயரில், முழுமை பெற்ற இஸ்­லா­மிய  ஹிஜாப்  இன்று பெஷன்  ஹிஜா­பாக  உரு­வெ­டுத்து  கிட்­டத்­தட்ட பாதி­ய­ளவு  அல்­லது அதை­விட அதி­க­மாக  ஏனைய அன்­னியப் பெண்­க­ளது  ஆடை­க­ளுக்கு  ஒப்­பாகி கண்­ணியம் இழந்து போய்­விட்­டது.

“உனக்கு   இன்ன  ஆடை அழ­காக இருக்கும்” என ஒரு கணவன் மனை­வியைப் பார்த்துக் கூறினால்  அது ஸுன்னா.   அது அன்பு. ஆனால்,  “Madam,  இந்த  model Abaya  உங்­க­ளுக்கு  பசுந்தா, அழகா இருக்கும்” என ஒரு  Sales boy கூறினால்  இதனை என்­ன­வென்று சொல்­வது?  இதனை   அன்பின்  மற்­றொரு வடிவம்  என்­பதா? கடை­க­ளுக்கு  செல்லும்  முஸ்லிம்  பெண்கள் கூட தற்­போது பெஷனில்  இருக்கும்  ஹிஜாபின்  பெய­ரைக்­கூறி  வாங்கி  வருகின்றனரே  தவிர,  அது எந்தளவு  மார்க்கத்தின்  வரையறைகளுக்குள் உட்பட்டு இருக்கின்றது என்பதனை   துளியளவும் கவனிக்காமல்  இருப்பது வேதனைக்குரியது. இவை வெறும் கதையல்ல. எமது முஸ்லிம் சமூகத்தில் நடக்கும்  நிஜங்களே. அல்லாஹ் எம் அனைவரையும்  காத்தருள வேண்டும்.

 இவ்வாறான போக்கினால் நாம் எம்மை  உத்தம நபியின்  உன்னத சமூகம் என அழைத்துக் கொள்ளும் பாக்கியத்தை  என்றோ இழந்து விட்டோம். சாதாரணமாக ஏனைய  மதப் பெண்களைப் போல் பெஷனிற்கு  ஆடையணியும்  நாம் எவ்வாறு  கண்கள்  பார்த்திராத,  காதுகள் கேட்டிராத, உள்ளங்களின் கற்பனைகளுக்கே  எட்டிராத  அந்த தெவிட்டாத, இன்பமயமான சுவர்க்கத்தினை அடைய முடியும்? அல்லாஹ்வின் அருள்வாக்கையும்  உத்தம நபியின்  நேரிய வழியையும்  பின்பற்றாமல் எப்படி எமது சுவர்க்கப் பயணத்தினை நிச்சயித்துக் கொள்ளப் போகிறோம்? எமது முஸ்லிம் பெண்கள் எப்போது சிந்திப்பார்களோ...?

0 கருத்துரைகள்:

Post a Comment