May 03, 2018

மாற்றுமத பாடசாலைகளும், முஸ்லிம் பிள்ளைகளின் கல்வியும்..!!

திருகோணமலை இந்துக்கல்லூரியில் இஸ்லாமிய ஆசிரியைகள் தங்கள் மார்க்க விழுமியங்களுக்குத் தோதுவாக அமைந்த ஹிஜாப் ஆடையை அணிய தடைவிதிக்கப்பட்ட விவகாரம் பாரிய வாதப் பிரதி வாதங்களையும், முறுகல்களையும் தோற்றுவித்திருப்பதனை அவதானிக்க முடியுமாகவுள்ளது.

அந்நியப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகள் எதிர் நோக்கும் ஹிஜாப் பிரச்சினை போக இந்த இடத்தில் இன்னுமொரு விடயம் ஆழமான கருத்தாடல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

அது தான்; அந்நியப் பாடசாலைகளில் கல்வியை தொடரும் முஸ்லிம் பிள்ளைகள் எதிர்நோக்கும் இஸ்லாத்திற்கு மாற்றமான கலாச்சார, பண்பாட்டு, மத விடயங்களை தங்கள் வாழ்வொழுங்குக்குள் கல்வி எனும் போர்வையில் உள்வாங்கிக் கொள்ளும் அவலம்.

ஒவ்வொரு இனத்தவர்களும் தங்களது மத நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் சார்ந்த விவகாரங்களை ஓரளவுக்கு சுதந்திரமாய் நடைமுறைப்படுத்துவதற்கும், பிரதிபலிப்பதற்கும் ஏற்றாற் போன்று தான் இன ரீதியான பாடசாலைகள் அமையப் பெற்றுள்ளன. அதனால் தான் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பாடசாலைகள் என்பன தனித்தனி அடையாளங்களுடன் நிமிர்ந்து நிற்கின்றன.

ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எந்தப் பாடசாலைகளில் சேர்க்கிறார்களோ அந்நிமிடம் முதலே அப்பாடசாலையின் மத, கலாச்சார விதிமுறைகளுக்கு ஏற்ப தங்கள் பிள்ளைகளை கல்வி பயிலச் செய்யும் சம்மதத்தினையும் ஒப்புக் கொண்டு விடுகிறார்கள். இதுவே எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது.

ஒரு பாடசாலையை தன் பிள்ளையின் கற்கைக்காக தெரிவு செய்யும் பெற்றோர்கள் இந்நிலையை கருத்திற் கொண்டே குறித்த பாடசாலைகளில் பிள்ளைகளை இணைக்க வேண்டும்.

இவ்விடயத்தை மனதில் வைத்துக் கொண்டு அந்நியப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை இணைக்கும் முஸ்லிம் பெற்றோர்களுடன் சில அவதானக் குறிப்புகளை அலச விரும்புகிறேன்.

பௌத்த, இந்து, கிறிஸ்தவ பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை இணைக்க விரும்பும் முஸ்லிம் பெற்றோர்கள் இரண்டு அடிப்படைகளை கருத்திற் கொண்டே பெரும்பாலும் இம்முடிவை எடுக்கின்றனர்.

1)அந்நியப் பாடசாலைகளின் கல்வித்தரம் முஸ்லிம் பாடசாலைகளின் தரத்தை விட சிறப்பாகவுள்ளமை என்ற மனப்பதிவு.

2)பிற மொழிகளில் (சிங்களம் & English) கல்வியை தொடர்வதனால் எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு குறிப்பாக அரச உத்தியோகங்களுக்கு தங்கள் பிள்ளைகள் உள்வாங்கப்படல் வேண்டும் எனும் எதிர்பார்ப்பு.

மேற்குறித்த இரு காரணங்கள் நிமித்தமே பெரும்பாலான முஸ்லிம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்நிய பாடசாலைகளில் இணைத்து வருகின்றனர்.

இங்கு நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டிய விடயம் யாதெனில் சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு எனும் இரு இலக்குகளை அடைவதற்காக நாம் விலையாக கொடுப்பது இஸ்லாத்தையும், இஸ்லாமிய அறிவு சார் பாரம்பரியங்களையும் என்பதை மறந்துவிடல் ஆகாது.

பிற பாடசாலைகளில் கல்வி பயிலும் பல பிள்ளைகளின் இஸ்லாமிய அறிவு தேடல் மிகக் குறைவான மட்டத்திலேயே அமைந்துள்ளன என்பதுவே நிதர்சனம். அதற்கு மாற்றமாக 

*அந்நிய கலாச்சார தாக்கம்
*பிற மத சம்பிரதாயங்களுக்கு இசைவாக்கம் அடைதல்
*மார்க்க தெளிவின்மை
*கலப்பு திருமண முறைகள்
*மார்க்க முறனான வைபவங்களுக்கு இசைவாக்கம் அடைந்து நன்மையை ஏவி தீமையை தடுத்தல் எனும் ஈமானியப் பண்பு குறைந்துவிடல்

என்று பல்வேறு எதிர் மறை விளைவுகளை விலையாக கொடுத்தே கல்வியை தொடரும் அவலம் நீடிக்கிறது.

வெறுமனே ஆடை சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்பதை மட்டும் பேசுபொருளாக ஆக்காது, இஸ்லாத்தை இழந்து வரும் எதிர்கால சந்ததிகளின் நிலை குறித்தும் நம் கவணத்தை திருப்புவது காலத்தின் தேவையாகும்.

இந்த இடத்தில் கீழ்காணும் முடிவுகளை நோக்கி நம் பெற்றோர்கள் நகர்வதே ஆரோக்கியமான நகர்வாக அமைய முடியும்.

1) இஸ்லாத்தையும் அதன் பண்பாடுகளையும் அடகு வைத்து சிறந்த கல்வி& தொழில் என்பதை இலக்குப்படுத்துவதை தவிர்த்து சுமாரான கல்வியானாலும் இஸ்லாமிய விழுமியங்களுடன் ஓரளவுக்கு பாதுகாப்பான முஸ்லிம் பாடசாலைகளை தெரிவு செய்தல்.

2) இருக்கும் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனம் கண்டு, அவற்றை நிவர்த்திப்பதற்கான அனைத்துவிதமான உதவி ஒத்தாசைகளையும் பாடசாலை நிர்வாகத்திற்கு வழங்குதல்.

இது போக, முஸ்லிம் பாடசாலை நிர்வாகங்களும் தங்கள் பாடசாலையின் இஸ்லாமியத் தனித்துவம் பேணி, மார்க்க முறணான நிகழ்வுகளை தவிர்த்து, தனித்துவப் பாதையில் அமானித உணர்வுகளுடன் நடைபயில ஆரம்பித்தல் வேண்டும்.

எப்போதும் அரசையோ, பிறரையோ தங்கி நிற்காது, எனதுபாடசாலையின் முன்னேற்றத்திற்கு நானே முதல் பங்காளி எனும் மனோபாவம் ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்திலும் ஊன்றப்படல் வேண்டும். இதுவே ஆரோக்கியமான இஸ்லாத்துடன் கூடிய நகர்வுக்கும், புதியதொரு விடியலுக்கும் வழிவகுக்கும்.

-Mohamed Thaha Farzan-

4 கருத்துரைகள்:

அருமையான கருத்து முஸ்லிம் பெற்றோரும் சமூகத் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விடயம்

நல்ல கல்வியும் ஒழுக்கமும் (education & deciplines) வேண்டும் என்றால் கத்தோலிக்க, கிருஸ்தவ, இந்து, பௌத்த பாடசாலைக்களே.

விஷடமாக பெண்கள் பாடசாலைகள். கொழும்பு, யாழ்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை என எல்லா மாவட்டங்களிலும் இதே நிலமைதான். Results listயை எடுத்து பாருங்கள்.

Ajan Antonyraj,

my reply to your foolishness comments just a laughf

3 children raped daily in Sri Lanka
At least three children are raped in Sri Lanka each day, indicating that the incidence of sexual assault of minors is escalating.

Statistics available at Police Headquarters reveal that 480 cases of child rape were reported between January and June this year, while 925 such cases were reported last year. An officer at Police HQ said Ratnapura district had the country’s highest number of child rape cases – 79 in 2009, and 47 in the first six months of this year.

Most of the victims lived on tea estates, in line rooms, where sexual molestation of underage children is not uncommon. Families on tea estates often marry off daughters who are underage. Last year, at least 55 and 53 child rape cases were reported from Kegalle and Anuradhapura respectively, and 46 cases were reported from Tangalle in the first six months of this year.

During the chena cultivation season, farmer parents in Anuradhapura district go out to work in the fields, leaving their children alone at home and exposed to danger.

“A lack of parental care, attention and supervision is one major reason children get sexually abused, and in most cases the wrongdoer is a close relative of the victim,” the Police officer said. “Going by the number of cases reported to the Police, it would seem that girls in the 14-to-16 age group are becoming regular targets for rape.”

The officer added that the number of rape cases that go unreported may be much greater than the number that gets reported.

Meanwhile, according to the Police officer, sex is becoming common practice among schoolchildren in Colombo, who said that easy access to pornography on the Internet was a contributing factor.


Now tell me all these from muslim school or community, tell me asshole?

@Rana, Big question, but easy to answer it.
Victims:- less likely
Culprits: most likely

Post a Comment