Header Ads



மஹிந்த ராஜபக்சவை காணவில்லை

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் நேற்று (08), எதிரணி ஆசனங்களில், ஒன்றிணைந்த எதிரணியினரின் ஆரவாரத்துடன் அமர்ந்தனர்.  

ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட 8ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர், நேற்று (08), வைபவ ரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிற்பகல் 2.15க்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்மிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்த சு.க உறுப்பினர்கள் 16 பேரும், ஆளும் தரப்பு வழியாகச் சபைக்குள் நுழைந்தனர்.  

இதன்போது, எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்த ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் எழுந்து ஆரவாரத்துடன், அவர்களை தம் பக்கம் வரவேற்றனர்.  

அதன்பின்னர், குறித்த 16 உறுப்பினர்களும், அவர்களது சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில், தமது ஆசனங்களில் அமர்ந்தனர்.  

ஜனாதிபதி, தனது கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதற்கு முன்னரே, அந்தப் 16 பேரும், எதிரணி ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.  

இதேவேளை, நேற்றைய விசேட அமர்வில், முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

Powered by Blogger.